பக்கம் எண் :

106 குசேலோபாக்கியானம்

சிரித்திடச் செல்வமே செல்வம் என்னும்" என்ற நீதிநூற் கருத்தை ஒப்பிடுக.
                                                       (112)
     மதுமடை உடைத்துப் பாயும்
          வனத்துழாய்க் கண்ணி வேய்ந்து
     விதுமுகப் பதுமை செங்கை
          மெல்லென வருடச் சேந்து
     கதுமெனக் கருதும் அன்பர்
          கருத்தினுட் புகுந்து வாழும்
     முதுமறைப் பெருமான் பாதம்
          பெறுதலே மூரிச் செல்வம்.

   (சொ - ள்.) மது மடை உடைத்து பாயும் வனம் துழாய் கண்ணிவேய்ந்து -
தேனானது மடையை உடைத்துப் பாயும்படி வழிகின்ற அழகிய துளவ மாலையை
அணிந்து ; விது முகம் பதுமை செங்கை மெல் என வருட சேந்து - முழுமதியை ஒத்த
திருமுகத்தையுடைய திருமகள் தனது சிவந்த கையினால் மெல்ல வருடுதலால் சிவப்புற்று,
கதும் எனக் கருதும் அன்பர் கருத்தினுள் புகுந்து வாழும் - விரைவாக நினைக்கும்
அடியார்களின் கருத்தில் விரைந்து புகுந்து வாழுகின்ற, முதுமறை பெருமான் பாதம்
பெறுதலே மூரி செல்வம் - பழமையான மறைப் பொருளாகிய கண்ணனுடைய
திருவடிகளை அடைதலே பெருஞ்செல்வமாம்.

   (வி - ம்.) அணிந்து, சேந்து, புகுந்து என்ற வினையெச்சங்கள் வாழும் என்ற
பெயரெச்சத்தைக் கொண்டு அது பாதம் என்ற பெயர் கொண்டு முடிந்தது. அணிந்து
சேந்து புகுந்து வாழும் பாதம் என்க. விது - சந்திரன் ; பதுமை - தாமரையில்
இருப்பவள் (இலக்குமி.)
                                                         (113)

     கைப்பொருள் பெற்ற ஞான்றே
          கடவுளா லயத்திற் கீந்தும்
     மெய்ப்படு புராண நூல்கள்
          விருப்பொடு கேட்டு வந்தும்
     வைப்பென இரப்போர்க் கீந்தும்
          வருபவ ருளரேற் கூற்ற
     மொய்ப்புயத் தண்டந் தப்பி
          முன்னவன் இன்பத் தாழ்வார்.

   (சொ - ள்.) கைப்பொருள் பெற்ற ஞான்றே கடவுள் ஆலயத்திற்கு ஈந்தும் -
கையினிடமாகப் பொருள் கிடைத்த