|
செவி உளாரும் பயில்தரு செவிடர் ஆவர்
- பொன்னணி அணிந்த காதுள்ளவரும்
பழகிய செவிட்டுத் தன்மையுடையோராவர் ; குறிபெறு கண் உளாரும் குருடராய்
முடிவர் - குறிக்கும் பொருள்களைக் காணுதற்குரிய கண்களைப் பெற்றுள்ளாரும்
குருடர்களாய் முடிவார்கள்.
(வி - ம்) ஏழைகள் சென்று குறை கூறினால் அதற்கு விடை கூறாமலும்,
செவி
கொடுத்துக் கேளாமலும், அவ்வேழைகளைக் கண்ணெடுத்துப் பாராமலும் செருக்குடன்
இறுமாந்திருப்பது அறிவற்ற செல்வரியற்கை ஆதலால், மூகர் ஆவர், செவிடராவர்,
குருடராய் முடிவர் என்று கூறினர். கீழ் மக்களே இச்செல்வத்தை மதிப்பர் எனவே
மேன்மக்கள் இதனை மதியார் என்பது தானே விளங்கும், (111)
பல்கதிர் விரித்துத் தோன்றிப்
பாடுசெய் கதிரே
போல
மல்லல்நீ ருலகில் தோன்றி
மறைந்திடும்
நும்மை விட்டுச்
செல்வமென் றுறுவ தற்குஞ்
செல்வமென்
றுரைக்கும் பேர்நன்(று)
அல்லலை விளைப்ப தாகா
தரும்பெறற்
செல்வம் பாவாய்.
(சொ - ள்.) பல்கதிர் விரித்து தோன்றி பாடுசெய் கதிரே போல
- பலவாகிய
கதிர்களையும் பரப்பி உதித்துப் பின் மறையும் ஞாயிற்றைப்போல ; மல்லல் நீர் உலகில்
தோன்றி மறைந்திடும் நும்மை விட்டு செல்வம் என்று உறுவதற்கும் - வளமான கடல்
சூழ்ந்த உலகத்தி்ல் பிறந்து இருக்கின்ற நுந்தம்மை விடுத்து நாம் செல்வோம் என்று
சொல்வதுபோல அடைகின்ற பொருளுக்கும், செல்வம் என்று உரைக்கும் பேர் நன்று
- செல்வம் என்று கூறும் பெயர் நன்கு பொருந்துவதாம் ; பாவாய் - எழுதிய பாவைபோல்
வாளே ; அரும்பெறல் செல்வம் அல்லலை விளைப்பது ஆகாது - பெறுதற்கரிய
செல்வமானது துன்பத்தை உண்டாக்கும் ; ஆதலால் அதனை விரும்புவது கூடாது.
(வி - ம்.) சூரியன் தோன்றுவதும் மறைவதும் போல மக்கள் பிறப்பும்
இறப்பும்
என்று கொள்க. செல்+வ்+அம்=செல்வம்=செல்வோம் என்று தன்மைப் பன்மை
வினைமுற்றாகக் கொண்டு பல செல்வப் பொருள்கள் கூறுவதாகப் பொருள்
அமைத்துள்ளார், "தரித்திரம் தரித்திரம் என்னும் தாரணி,
|