|
கருவினுட்
புகுத்தும் இன்ன
கரிசுகண் டதனால்
அன்றோ
இருநிலத் திடைவெ றுக்கை
என்மனார் புலமை
சான்றோர்.
(சொ - ள்.) பொரு அறு பந்தம் எல்லாம் புணர்த்திடும் - ஒப்பற்ற
தளைகளை
(பாசங்களை) எல்லாம் பொருத்திவிடும் ; தெய்வ சிந்தை ஒருவ மேலிட்டு நிற்கும் -
கடவுட் கொள்கைகள் நீங்கும்படி மேற்பட்டு நிற்கும் ; உறக்கமும் இறக்க செய்யும் -
துயிலையும் இல்லையாம்படி நீங்கச்செய்யும் ; கருவினுள் புகுத்தும் - தாயின்
கருப்பையினுள் செலுத்தும் (பிறக்கச் செய்யும்) ; இன்ன கரிசு கண்டதனால் அன்றோ
புலமை சான்றோர் இரு நிலத்து இடை வெறுக்கை என்மனார் - இவைபோல்வன பல
குற்றங்கள் (இந்தப் பொருளினிடத்துக்) காணப்பட்டமையாலன்றோ அறிவாலுயர்ந்த
பெரியோர் பெரிய நிலவுலகத்தில் (இதனை) வெறுக்கை என்றுரைப்பாராயினார்.
(வி - ம்.) மனைவி மக்கள் சுற்றம் என்ற பாசத்தைப் பந்தம்
என்றார். செல்வம்
உள்ளவரிடம் பாசபந்தங்கள் சேரும் ; அதனால் தெய்வம் சிந்தையை விட்டு நீங்கும்.
நான் என்ற ஆணவம் முனைந்து நிற்கும். ஓயாத கவலையிருப்பதால் செல்வர்களுக்குப்
பகலும் இரவும் உறக்கம் வராது. பாசபந்தத்தாலும் கடவுட் கொள்கை யின்மையாலும்
பிறப்பு நீங்காது. இது கண்டு அறிஞர் செல்வத்தை வெறுத்தனர். வெறுக்கப்பட்ட
பொருளாதலால் வெறுக்கை என்று செல்வத்திற்குப் பெயர் வந்தது என்றார். (110)
சிறியரே மதிக்கும் இந்தச்
செல்வம்வந்
துற்ற ஞான்றே
வறியபுன் செருக்கு மூடி
வாயுள்ளார்
மூகர் ஆவர்
பறியணி செவியு ளாரும்
பயில்தரு செவிடர்
ஆவர்
குறிபெறு கண்ணு ளாருங்
குருடராய் முடிவ
ரன்றே.
(சொ - ள்.) சிறியரே மதிக்கும் இந்தச் செல்வம் வந்து உற்ற
ஞான்றே -
கீழ்ம்க்களே மதிக்கற்குரிய இந்தச் செல்வமானது வந்து பொருந்திய போழ்தே ;
வறிய புல் செருக்கு மூடி வாய் உள்ளார் மூகர் ஆவர் - பயனற்ற அற்பமாகிய
அகந்தையால் மறைக்கப் பெற்று வாய் உடையவரும் ஊமையராவர் ; பறி அணி
|