பக்கம் எண் :

குசேலோபாக்கியானம்103


   (வி - ம்) செல்வமானது நல்லவரைத் தீயவராக்கும், தீயவரை நல்லவராக்கும்;
கற்புடையாரைக் கண்டு அஞ்சாமலிருக்கச் செய்யும், இவை போன்ற துன்பங்களைச்
செய்யும். ஆதலால் பாழான பொருள் என இகழ்ந்தபடி இது.             (108)

     கோடிபொன் அளிப்பன் இன்றே
          கோடிரோர் மாத்தி ரைக்குள்
     ஊடிய கிளைக்கோர் வார்த்தை
          உரைத்தடை குவனென் றாலுந்
     தேடிய கால தூதர்
          சி்மிழ்த்தல்விட் டொழிவ ரேகொல்
     வாடிய மருங்குல் நங்காய்
          மாண்பொருட் பயன்கண் டாயோ.

   (சொ - ள்) கோடிபொன் அளிப்பன் இன்றே கோடீர் ஓர் மாத்திரைக்குள் ஊடிய
கிளைக்கு ஓர் வார்த்தை உரைத்து அடைகுவன் என்றாலும் - கோடி என்ற எண்கொண்ட
பொன்னைக் கொடுப்பேன், இன்றே பெற்றுக் கொள்வீர் ! ஒரு நொடிப்பொழுது
வருந்துகின்ற உறவினர்க்கு ஒரு (தேறுதல்) மொழி கூறிப் பின் வருவேன் என்று
(இரந்து) மொழிந்தாலும் ; தேடிய காலதூதர் சிமிழ்த்தல் விட்டு ஒழிவரே - (உயிரை)
தேடிப்பற்றிய எமதூதர் கட்டிச் செல்லுதலை விடுத்து நீங்குவரோ? (நீங்கார்) ; வாடிய
மருங்குல் நங்காய் மாண் பொருள் பயன் கண்டாயோ - துவண்ட இடையையுடைய
மாதராய் ! பெருமையுள்ள செல்வத்தின் பயனை அறிந்தனையோ ?

   (வி - ம்.) செல்வம் எவ்வளவு பெற்றிருப்பினும் அதனால் வாழ்நாளை அதிகம்
பெற்று வாழமுடியாது ; குறித்த காலத்தில் யமன் வறியாரையும் செல்வரையும்
கொண்டுபோய் விடுவான் , செல்வர்க்கு என்ன சிறப்பு உண்டு ? ஒன்றும் இல்லை,
என்று அதன் இழிவு காட்டினர். சிமிழ்த்தல் - கட்டுதல், பற்றுதல். நீங்குவரோ - ஓ :
எதிர்மறை. கோடிர் - கொள்வீர் : முன்னிலை யேவற்பன்மை வினைமுற்று. கொள்
என்ற பகுதி முதனீண்டு கோள் என நின்று, த் எழுத்துப்பேறு பெற்று விகுதியுடன்
முடிந்தது.                                               (109)

     பொருவறு பந்த மெல்லாம்
          புணர்த்திடுந் தெய்வ சிந்தை
     ஒருவமே லிட்டு நிற்கும்
          உறக்கமும் இறக்கச் செய்யுங்