|
(வி - ம்.) நிலப்
பிளப்புக்கள் தோன்றின வெயிலின் வெம்மையால், அவை
சூரியன் தன்னை விழுங்கும் கேது என்னும் பாம்புக்கினமாகிய பல
பாம்புகளுறைவிடமாகிய பாதாலத்துக்குள் தன் கரங்கள் சென்று வருத்துவதற்கு
உண்டாக்கிய பல வழிகள் போலத் தோன்றின என்பது கருத்து. இது தற்குறிப்
பேற்ற வணி.
(180)
நலக்கதிர்செய் நம்பகையை
நான்மறையோர்
இதுகொண்டே
விலக்குவர்நாங் கொண்டிருப்பின்
மேவாதெப் பகையுமெனப்
புலத்தமைத்துக் கவர்ந்தான்போற்
பொய்கைகுளங்
கால்நதிமுன்
நிலத்தமைத்த நீரெல்லாம்
நெடும்பரிதி
கவர்ந்தனனால்.
(சொ - ள்.) நலம் கதிர் செய் நம் பகையை நான்மறையோர் இது
கொண்டே
விலக்குவர் நாம் கொண்டு இருப்பின் மேவாது எப்பகையும் என புலத்து அமைத்து
கவர்ந்தான் போல் - நல்ல ஒளியைச் செய்கின்ற நமது மந்தேகர் முதலிய பகைவரை,
நான்கு வேதங்களையு முடையோராகிய அந்தணர் இந் நீரைக்கொண்டே விலகும்படி
செய்கின்றனர் (ஆதலால் இந்த நீரினை,) நாம் கொண்டிருந்தால் எந்தப் பகையும்
அடையாது என்று கருத்துட்கொண்டு கவர்ந்தனன் என்று சொல்லுமாறும் ; பொய்கை
குளம் கால் நதிமுன் நிலத்து அமைத்த நீரெல்லாம் நெடும் பரிதி கவர்ந்தனன் -
தடாகம் சிறு குளம் கால்வாய் ஆறு முதலாக நிலத்தின்கண் அமைத்துள்ள இடங்களிலுள்ள
நீரை எல்லாம் பெரிய பகலவன் வெம்மையால் கவர்ந்துகொண்டனன் போலும்.
(வி - ம்.) நமக்குப் பகையாகிய மந்தேகர் முதலிய அசுரரை விலக்குவதற்கு
மறையோர் நீரை வாரி யிறைக்கின்றனர். அந் நீர் முழுவதையும் நாம் அடக்கி
வைத்துக்கொண்டால் நம் பகைவர் நம்மிடம் வரார் என்ற கருத்துடன் சூரியன் ஏரி,
குள முதலிய நீர் நிலைகளில் உள்ள நீர் முழுவதும் கவர்ந்தான் என்று கூறும்படி
எல்லாம் வறந்தன என்பது. இதுவும் தற்குறிப்பேற்ற வணி.
(181)
|