|
தெள்ளுபுனல்
நசைமிக்குத்
திரிமருப்பின்
இரலையெலாம்
நள்ளரிய பேய்த்தேரின்
பின்தொடர்ந்து
நலிந்திடுமால்
வள்ளலென வெளிக்காட்டி
வஞ்சிக்கும்
உலோபர்கள் முன்
எள்ளுவறு மைப்பிணியோர்
தொடர்ந்துதொடர்ந்
திளைப்பதுபோல்.
(சொ - ள்.) வள்ளல் என வெளிகாட்டி வஞ்சிக்கும் உலோபர்கள்
பின் எள்ளு
வறுமை பிணியோர் தொடர்ந்து இளைப்பது போல் - கொடைக் குணம்
படைத்துளோமென்று வெளிக்குக் காட்டி வஞ்சிக்கின்ற இவறன்மை உடையாரின் பின்
பழிக்கப்படுகின்ற வறுமைப் பிணியினை உடையார் பலகாலுந்திரிந்து
மெலிந்தாற்போல ; தெள்ளு புனல் நசை மிக்கு திரி மருப்பின் இரலை எலாம் நள்
அரிய பேய்த் தேரின் பின் தொடர்ந்து நலிந்திடும் - தெளிந்த நீருண்டலை விரும்பிய
திருகிய கொம்புகளையுடைய மான்கள் எல்லாம் பொருந்துதல் இல்லாத கானல் நீரினைத்
தொடர்ந்து தொடர்ந்து வருந்தும்.
(வி - ம்.) உலோபர் - ஈயாதவர். பொருட் பற்றுடையோர். கொடையாளி
என்று
புறத்தார்க்குக் காட்டி வந்தவர்க்கு இன்றுவா, நாளைக்குவா என்று ஏமாற்றுவோரை
"வஞ்சிக்கும் உலோபர்கள்" என்றார். வறியோர் வஞ்சிக்கும் உலோபர் பின்
செல்லுவதுபோல மான்கள் கானலை நீரென்று கருதி வெளியெல்லாம் அலைந்தன
என்றார். இஃது உவமையணி. (182)
புறங்கொடாத் திறல்வீரர்
பூம்போர்வை
நெகிழ்த்தகற்றிப்
பிறங்குசாந் தாற்றிவிடு
வளிக்களித்துப்
பெரிதுவப்பார்
அறங்கொள்மா தருங்கணவர்
அங்கையன்றித்
தடவுதலின்
மறங்கொள்குயஞ் சிவிறிவிடு
வளிதடவ வம்பவிழ்ப்பார்.
(சொ - ள்.) புறம் கொடா திறல் வீரர் பூ போர்வை நெகிழ்த்து
அகற்றி பிறங்கு
சாந்தாற்றிவிடு வளிக்கு அளித்து பெரிது உவப்பார் - முதுகிடாத வெற்றியையுடைய
வீரர்கள்
|