|
பொலிவாகிய மேற்போர்வையைத் திறந்து
நீக்கி விளங்குகின்ற சிவிறியிற் பொருந்தி
வருகின்ற காற்றிற்குத் தம் புறத்தைத் தந்து மிகவுங் களிப்புக் கொள்வார்கள் ; அறம்
கொள் மாதரும் கணவர் அம் கை அன்றி தடவுதலில் மறம் கொள்குயம் சிவிறி விடு
வளி தடவ வம்பு அவிழ்ப்பார் - அறநெறியில் ஒழுகும் மங்கையரும் தம் கொழுநர்
அகங்கையன்றித் தடவுதல் இல்லாத வீரங்கொண்ட கொங்கைகளைக் காற்றுப் படும்படி
கச்சினை அவிழ்த்து விடுவார்கள்.
(வி - ம்.) ஒருவருக்கும் புறங்காட்டாத வீரரும் புறங்காட்டினர்
காற்றுக்கு ; தங்
கணவர் கைக் கன்றிக் கொங்கை காட்டாத கற்புடைய மாதரும் கொங்கையைக்
காட்டினர் காற்றுக்கு ; என வேனிற் கொடுமையை நயம்பட விளக்கினர். பூ +
போர்வை = பூம் போர்வை - அழகிய மேலாடை. தடவுதல் இல் - தீண்டுதல்
இல்லாத.
(183)
காலோடை வாவிகுளம்
முதலாய கணக்கிலவன்
மேலோடும் புனல்வறப்ப
அவற்றுறைமென்
பறவைகள்நற்
பாலான ஒருவனிடம்
பற்றியி்னி
துண்டகிளை
ஏலாத்துன் பவனுறுங்கால்
இரிவதென இரிந்தனவால்.
(சொ - ள்.) கால் ஓடை வாவி குளம் முதலாய கணக்கில் அவல் மேல்
ஓடும்
புனல் வறப்ப அவற்று உறை மென் பறவைகள் - கால்வாய் ஓடை தடாகம் முதலாகிய
அளவற்ற பள்ளங்களில் பாய்கின்ற நீர் வறந்திட அவ்விடங்களில் வாழ்ந்த மெல்லியல்புள்ள
புள்ளினங்கள், நல்பால் ஆன ஒருவனிடம் பற்றி இனிது உண்ட கிளை - நல்லூழாற்
செல்வம் பெற்ற ஒருவனிடத்திற் கூடி இனிமையாக உண்டு வாழ்ந்த உறவினர், ஏலா
துன்ப அவன் உறுங்கால் இரிவது என இரிந்தன - பொருந்தாத துயரத்தை அவன்
அடையும்போது விட்டுச் செல்வதுபோல அவ்விடத்தை விட்டுப் பறந்து ஓடின.
(வி - ம்.) அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல் என்று வரும்
கவிக் கருத்தினைத்
தழுவியது. இதுவும் உவமையணி.
(184)
|