பக்கம் எண் :

குசேலோபாக்கியானம்227


செல்லாதே என அச்சுறுத்தினர். இந்திரனும் இக்காலத்தில் அவன் ஆணையின்றி
நெருங்க முடியாது எனக் கண்ணன் பெருமை கூறினர்.                (284)

     அல்லது மிகுநட் பேயென்
          றற்றநோக் காது செல்லின்
     ஒல்லையில் நினக்குண் டாயிற்
          றுறுமவ மானம் மெய்யே
     நல்லதன் மனையின் வாக்கும்
          நறுநெயுண் டொளிர்வ தேயென்
     றெல்லடர் சுடரை முத்தம்
          இடிற்சுடா தமைவ துண்டோ.

   (சொ - ள்.) அல்லது மிகுநட்பு என்று அற்றம் நோக்காது செல்லின்
ஒல்லையில் நினக்கு உண்டாயிடற்று உறும் அவமானம் மெய்யே - அல்லாமலும்
மிகுந்த நேயம் என்று காலம் பார்க்காமல் சென்றால் விரைவில் உனக்கு மிகுந்த
அவமானம் உண்டாதல் உண்மையே, நல்லதன் மனையின் வாக்கு நறு நெய் உண்டு
ஒளிர்வதே என்று எல்லடர் சுடரை முத்தமிடின் சுடாது அமைவது உண்டோ -
நன்மையாகிய தன்னுடைய வீட்டில் ஊற்றப்பட்ட மணமுள்ள நெய்யை உண்டதால்
விளங்குவதே என்று கருதி ஒளி நெருங்கிய விளக்கை முத்தமிட்டால் அது சுடாமல்
இருக்குமா? சுடும்.

   (வி - ம்.) நம் மனையில் நாம் ஊற்றிய நெய்யை உண்டு தானே எரிகின்றது
என்று கருதி மனையில் ஏற்றிய விளக்கினை முத்தமிட்டாற் சுடாது குளிருமோ?
அதுபோலத்தான் அரச ரியல்பும் இருக்கும். நெருங்கினாற் சினத்தீச் சுடும் என
அறிக என்றனர்.                                               (285)

     பழியிலுன் குலத்தோர் செய்யப்
          படுதொழில் நன்கி யற்றி
     இழிவற உண்டு டுத்தல்
          இன்றிமிக் கெண்ணங் கொண்டு
     வழிநடந் திளைத்தாய் மெய்யும்
          வாடினா யந்தோ வானிற்
     கழிமதி வருக என்றுட்
          கசிந்தழும் மகவு போன்றாய்.

   (சொ - ள்.) பழி இல் உன் குலத்தோர் செய்யப்படும் தொழில் நன்கு இயற்றி
இழிவு அற உண்டு உடுத்தல் இன்றி