|
(சொ - ள்.) கலைபயில்
நாள் நட்பு என்று கரைந்தனை அந்த நட்பு இ
சிலைவலாற்கு இருக்கும் ஆயின் - கலைகளைக் கற்றுக் கொண்டிருந்த காலத்தில்
ஏற்பட்டுள்ள நட்பு என்று சொன்னாய், அந்த நட்பு இந்த வில்லில் வல்ல
கண்ணபிரானிடத்திலிருக்கு மானால், சென்ற பற்பல ஆண்டிற்குள் உலைவு அறு
முடங்கல் தீட்டி ஒன்று இரண்டு அனுப்பல் ஆமே - கடந்த பலபல
ஆண்டுகளுக்குள் கேடற்ற ஓலை எழுதி ஒன்று அல்லது இரண்டு அனுப்பு
வித்திருக்கக்கூடுமே, மலைவு அறு தூது உய்த்து உன்னை வருக என்று
அழைக்கலாமே - மாறுபாடற்ற தூதரை அனுப்புவித்து உன்னை வந்து போக என்று
அழைத்திருக்கக்கூடுமே.
(வி - ம்.) கலை பயின்ற நாள் முதல் நட்பு என்றால் பிரிந்த
நாள் முதல்
அதுகாறும் முடங்கல் வந்ததுண்டா? தூதுவனை அனுப்பி உன்னை
அழைத்ததுண்டா? இல்லையே. அதனால் கண்ணன் உன் நண்பினை மறந்தான்
என்பது தோன்றவில்லையா; ஆயாது வந்தனை நீ எனக் குறிப்பால் இகழ்ந்தனர்
எனக் கொள்க, (283)
அந்தநாள் தகுதிக் கேற்ப
ஆக்கினன் போலும்
நின்னட்
பிந்தநாள் தகுதி வானத்
திறைவனும் அணுகொ
ணாதம்
முந்தைநாள் நட்பை யெண்ணி
முடுகிநீ செலக்கூ
டாதால்
எந்தநா ளினும்பூ பாலர்
யாவர்க்கும்
நண்ப ரல்லர்.
(சொ - ள்.) அந்த நாள் தகுதிக்கு ஏற்ப ஆக்கினன் போலும் நின்
நட்பு -
அந்த நாள் நிலைமைக்கு ஏற்றபடி உன்னுடைய நட்பை அவன்
உண்டாக்கிக்கொண்டான் போலும், இந்த நாள் தகுதி வானத்து இறைவனும்
அணுகொணாது - இக் காலத்தின் நிலைமை தேவருலகத் தலைவனாகிய
இந்திரனாலும் நெருங்கமுடியாது, அ முந்தை நாள் நட்பை எண்ணி முடுகி நீ செல
கூடாது - அந்தப் பழையகால நட்பை நினைத்து விரைந்து நீ போகக்கூடாது, எந்த
நாளிலும் பூபாலர் யாவர்க்கும் நண்பர் அல்லர் - பூமியைக் காக்கின்ற மன்னர்கள்
எக்காலத்தும் யாவருக்கும் நண்பராக இரார்: (மன்னரியல்பு இது.)
(வி - ம்.) மன்னரியல்பு ஒரு காலத்தில் ஒரு விதம்; மற்றொரு
காலத்தில்
வேறு விதமாக மாறும். ஆதலால் விரைந்து நீ
|