பக்கம் எண் :

குசேலோபாக்கியானம்225


   (வி - ம்.) "பள்ளியில் மழைக் கொதுங்கியும் அறியான்" என்ற
பழமொழிபோல கல்வியுடைய ஊரிற் குடியிருந்தறியாதான் என்றார். இது "கல்வி"
இன்னதென்று சொல்லக்கேட்டும் இராத மூடன் என மிகவும் இழிவு கூறியது. வேதம்
முன்னாம் கலைகள் எனவே எல்லாக் கலைகளையும் கற்றுணர்ந்த அறிஞன் என
உயர்வு கூறியது. அரசவையிற் செல்வரே சிறப்படைவர் என்று கூறப்பட்டது.
                                                           (281)

     காமமே வெகுளி யேயுட்
          கலந்திடு மயக்க மேயென்
     றாமவை யமையப் பட்டோர்
          அவற்றொரோ வொன்று தோன்றின்
     மாமறை முழங்கிக் கூறி
          வருவிதி விலக்க யர்ப்பர்
     தோமறும் அமைச்சி டித்துச்
          சொல்வதுங் கொள்ளா ரம்மா.

   (சொ - ள்.) காமமே வெகுளியே உள்கலந்திடும் மயக்கமே என்று
ஆம்அவை அமையப்பட்டோர் - காமம் கோபம் மனங்கலந்த மயக்கம் என்று
சொல்லப்பட்டவற்றைப் பொருந்திய மன்னர்கள், அவற்று ஒரோவென்று தோன்றின்
மாமறை முழங்கி கூறி வருவிதி விலக்கு அயர்ப்பர் - அவற்றுள் ஏதாவதொன்று
தம் மனதில் தோன்றினால் பெருமையான மறை முழக்கமாகக் கூறிவருகின்ற
விதியையும் விலக்கினையும் மறந்து விடுவார், தோம்அறு அமைச்சு இடித்துச்
சொல்வதும் கொள்ளார் - குற்றமில்லாத அமைச்சர்கள் வற்புறுத்திக்கூறும்
அறிவுரைகளையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், அம்மா: அசை.

   (வி - ம்.) மன்னரியல்பு கூறினர். இதனால் மன்னர் நட்பினை அறிவுடையோர்
கொள்ளலாகாது என்பது குறிப்பு.                               (282)

     கலைபயில் நாள்நட் பென்று
          கரைந்தனை அந்த நட்பிச்
     சிலைவலாற் கிருக்கு மாயின்
          சென்றபற் பலவாண் டிற்குள்
     உலைவறு முடங்கல் தீட்டி
          ஒன்றிரண் டனுப்ப லாமே
     மலைவறு தூதுய்த் துன்னை
          வருகவென் றழைக்க லாமே.