|
பேறு உள்ளும் புந்தியினீரும் - விளங்குகின்ற
பிதிருக்குக் கருமத்தைச் செய்வதற்கு
(பிண்டம் முதலியன கொடுத்தற்கு) உலகில் நல்ல பிள்ளைபெறுதலைச் கருதுகின்ற
அறிவுள்ளீர்களும், அம்பு தூவுமுன் அரணம் சேர்மின் என்பர் பின்தோன்ற ஆயார்-
(நாம்) அம்பைச் செலுத்துவதற்கு முன்னதாகவே நீங்கள் காவல் இடங்களைச்
சேர்ந்துகொள்ளுங்கள் என்று சொல்வர் பின் தோன்றுவதை ஆராயமாட்டார்.
(வி - ம்.) அரசர் போர்புரியத் தொடங்கு பசு, பார்ட்பார்,
பெண்டிர்,
பிணியுடையார், பிள்ளைப்பேறு கருதினோர் ஆகிய இவர்மேற் பரிந்து வேற்றிடஞ்
செல்லப் பணிப்பர். அத்துணையே அவர்கள் அறநெறி. பின்னர்ப் போரில் அன்னார்
தோன்றினரா ? தோன்றிலரா என்று ஆராயாது போர்புரிவர். கொலையையும் புரிவர்
அவர்களை. ஆதலால் அரசர் மறதியுடையார் என்பது கூறினர். 'பின்தோன்ற
ஆயார்' என்பதற்கு பின் (அவர்கள் அப்போர் நிகழும் இடத்தில்) தோன்ற
(அவர்களில் யார் யார் தோன்றினர் என) ஆராயார் (போர் புரிவர் கொல்வார்) என
விரிவுரை கொள்க. இதனால் அவர் நட்புத் தீயது என்பது குறிப்பு.
(280)
கோதறு கல்வி சாலூர்க்
குடியிருந் தறியா
னேனும்
ஓதருஞ் செல்வம் மிக்கோன்
ஒருவனோ சிறந்தோ
னாவன்
காதலின் வேதம் முன்னாங்
கலைகள்கற்
றுணர்ந்தோ னேனுந்
தீதமை மிடிய னாயிற்
சிறந்திடான்
வேத்த வைக்கே.
(சொ - ள்.) கோது அறு கல்விசால் ஊர் குடியிருந்து அறியான் எனும்
ஓது
அரும் செல்வம் மிக்கோன் ஒருவனே சிறந்தோன் ஆவன் - குற்றம் அற்ற
கல்விநிறைந்த ஊரில் குடியிருந்து அறியானாயினும் சொல்லற்கரிய செல்வத்தில்
சிறந்துள்ள ஒருவனே மேன்மை உடையவன் ஆவான் ; காதலின் வேதம் முன்
ஆம் கலைகள் கற்று உணர்ந்தோன் ஏனும் தீது அமை மிடியன் ஆயின்
சிறந்திடான் வேந்து அவைக்கு - விருப்புடன் பயிலப்படும் வேதம் முதலிய
கலைகளைப் படித்து உயர்ந்தவனாயிருப்பினும் தீமை பொருந்திய
வறிஞனாயிருப்பின் அரசவையில் சிறப்படைய மாட்டான்.
|