|
மாற்றலர்ச்
செற்ற ஞான்றே
மற்றவர் நகர
முற்றும்
வேற்றுவண் கழுதை யேரின்
விரைதர உழுவித்
துண்ணப்
போற்றலில் வரபு கொள்முன்
பொலிதர விதைப்பித்
துப்பின்
சீற்றமாற் றிடுவார் நட்போ
சிறந்தது மிடிக்கோட்
பட்டாய்.
(சொ - ள்.) மாற்றலர் செற்றஞான்றே மற்றவர் நகரம் முற்றும்
வேறுவண்
கழுதை ஏரின் விதைதர உழுவித்து உண்ண - பகைவரை அழித்து வென்ற
அப்பொழுதே அவர்கள் நக்ர் முழுவதையும் வேறுபட்ட கழுதைபூட்டிய ஏரால்
விரைவாக உழப்பண்ணி உண்பதற்கு, போற்றல்இல் வரகு கொள் முன் பொலிதர
விதைப்பித்து - போற்றுதலில்லாத வரகு கொள் முதலிய வற்றை நிறையும்படி
விதைக்கச்செய்து, பின்சீற்றம் மாற்றிடுவார் நட்போ சிறந்தது மிடிகோள் பட்டாய்
-
பின்னர்க் கோபத்தை நீக்குகின்றவர்களுடைய நட்போ சிறப்புடையது? வறுமையால்
பீடிக்கப்பட்டவனே.
(வி - ம்.) மிடிக்கோட்பட்டாய் என்பது அதனாற் பேதைமையுற்றாய்
என்ற
குறிப்பைக் காட்டியதாம். உன்னைப் பற்றிய வறுமை இவ்வாறு உன்னை
அலைவித்தது அறிவைக் கெடுத்தது எனவும் இகழ்ந்தாராயிற்று. (279)
ஆவுமான் இயற்பார்ப் பீரும்
ஆடமைத் தோளி
னீரும்
மேவுநோய்க் கோட்பட் டீரும்
மிளிர்பிதிர்க்
கருமஞ் செய்யப்
பூவினன் மகப்பே றுள்ளும்
புந்தியி னீரும்
அம்பு
தூவுமுன் அரணஞ் சேர்மின்
என்பர்பின்
தோன்ற ஆயார்.
(சொ - ள்.) ஆவும் ஆன் இயல்பார்ப்பீரும் ஆடு அமை தோளினீரும்
மேவுநோய் கோள்பட்டீரும் - பசுவும் பசுவின் தன்மை வாய்ந்த பார்ப்பனர்களும்
அசைகின்ற மூங்கில் போன்ற தோள்களையுடைய பெண்டீர்களும் பொருந்திய
நோயினால் பீடிக்கப்பட்டீர்களும், மிளிர்பிதிர் கருமம் செய்ய பூவில் நல்மக
|