|
சென்றான் என்பதும், பின் அந்நகரைக்
கடந்து கடலுங் கடந்து தன் ஊர் செல்லும்
வழியையடுத்து நடந்தான் என்பதும், இங்குக் கூறப்பட்டன. நடக்குங் காலை நிகழ்ந்த
செயல் அடுத்த கவி முதல் மூன்று கவிகளிலும் கூறுகின்றார். இலக்கு - குறிப்பு.
தவமாகிய குறிப்பு என்று கொள்க. (522)
அருந்தவர்கள் புகழ்சீர்த்தி யமைந்ததிருக்
கண்ணபிரான்
அருளி னாலே
பொருந்துவிர தாதிகளான் மிக்கிளைத்த
தன்னுடம்பு பூரிப்
புற்ற
திருந்தபழங் கந்தைசெழும் பொன்னாடை
யாயிற்றால்
இலங்குங் கண்டப்
பெருந்துளப மணியாரம் பெருவிலைமுத்
தாரமாப் பிறங்கிற்
றாலோ.
(சொ - ள்.) அருந்தவர்கள் புகழ்சீர்த்தி அமைந்த திரு கண்ணபிரான்
அருனினாலே - அருமையான தவமுனிவர்கள் புகழ்கின்ற சிறப்பமைந்த
கண்ணபிரான் திருவருளினாலே, பொருந்து பொருந்திய நோன்பு முதலியவற்றால்
மிகுதியும் களைத்த தன் உடல் பூரிப்பை அடைந்தது, இருந்த பழங்கந்தை
செழுபொன் ஆடை ஆயிற்று - உடுத்தியிருந்த பழைய கந்தைத் துணி பொன்
ஆடை ஆனது, இலங்கும் கண்டம் பெருதுளப மணி ஆரம் பெரு விலை முத்து
ஆரம் ஆ பிறங்கிற்று - வுளங்குகின்ற கழுத்தில் அணிந்திருந்த பெரிய துளசிமணி
மாலைகள் பெரிய விலையையுடைய முத்து மாலைகளாயின.
(வி - ம்.) கண்ணன் திருவருளால் குசேலனுடம்பு பருத்தது; பழங்கந்தை
பொன்னாடையாகவும் துளசிமணிமாலை விலை மதிக்க முடியாத முத்தாரமாகவும் மாறின
என்றார். (523)
செவியணிபுல் லியபொருள்கள் அரதனகுண்
டலாமகித் திகழ்ந்த
ஆன்ற
சவியணிகை விறற்றருப்பைப் பவித்திரம்பொன்
னாழியாய்த்
ததைந்த தோங்கும்
புவியணியுங் கட்டழகு காமனுங்கா
முறுசிறப்பிற்
பொலிந்த தம்ம
கவிமணியும் மதகளிற்றுக் கதிகமாம்
வலியுமுடற் கலந்த
தன்றே.
|