|
(சொ - ள்.) செவி
அணி புல்லிய பொருள்கள் அரதந குண்டலம் ஆகி
திகழ்ந்த - காதில் அணியப்பெற்ற அற்பமான அணிகள் மாணிக்கக் குண்டலங்கள்
ஆயின, ஆன்ற சவி அணி கை விரல் தருப்பை பவித்திரம் பொன் ஆழி
ஆய்ததைந்தது - நிறைந்த ஒளியுடன் அணிந்த கைவிரலில் இருந்த தருப்பை
மோதிரங்கள் பொன் மோதிரங்களாகத் திகழ்ந்தன, ஓங்கும் புவி அணியும் கட்டழகு
காமனும் காமுறு சிறப்பின் பொலிந்தது அம்மா - உயர்ந்த பூமியில் உள்ளோர்
புனைந்துரைக்கும் பேரழகும் மன்மதனும் விரும்பத்தக்க சிறப்புடன் விளங்கியது,
கவி அணியும் மதகளிற்றுக்கு அதிகம் ஆம் வலியும் உடல் கலந்தது - புலவர்கள்
அழகாய்ப் பாடும் மதயானைக்கும் மேலான வலிமை உடலிற் பொருந்தியது. அன்று,
ஏ: அசைகள்.
(வி - ம்.) காதணி மணிக்குண்டலமாகயும், கைவிரலணி பொன்னாழியாகவும்,
மன்மதன் போல அழகு வாய்ந்த வுடலாகவும் வலிமையுடையதாகவும் மாறின
என்றார். அம்மா: வியப் பிடைச் சொல். சலி - ஒளி. அழகில்லா உடல்,
வலியில்லாவுடல் முன்னிருந்தன எனக் குறிப்பிற்கொள்க. (524)
பாயபெர மிடிமுன்னே தனக்கொழிந்த
அவித்தையெனப்
பாறி மாய்ந்த
தேயவழி நடையிளைப்பு முதலியவெ
வாஞ்சற்றும்
இன்ாறாய் விட்ட
காயவெயில் குளிர்ந்ததுபா லையுநீரு
றிற்றிளமென்
காலும் வீசிற்
றாயவிவை யனைத்துமுணர்ந் திறும்பூது
மிகக்கொண்டான்
அன்ன காலை.
(சொ - ள்.) பாய பெருமிடி முன்னே தனக்கு ஒழிந்த அவித்தை என
பாறி
மாய்ந்து - பரவிய வறுமையானது முன்னர்த் தன்னிடமிருந்து நீங்கிப்போன
அறியாமைபோலக் கெட்டு அழிந்தது. ஏயவழி நடை இளைப்பு முதலிய எலாம்
சற்றும் இன்று ஆய்விட்ட - பொருந்திய வழி நடத்தல் முதலியவற்றால் ஆகிய
இளைப்புக்களெல்லாம் பொஞ்சமும் இல்லாமற் போயின, காய வெயில் குளிர்ந்தது
பாலையிம் நீர் ஊறிற்று இளமெல்காலும் வீசிற்று - காய்தலை உடைய வெயிலும்
குளிர்ச்சியடைந்தது, வறண்ட பாலை நிலமும், நீர் சுரக்கப் பெற்றது, இளமையான
மெல்லிய காற்றும் வீசியது, ஆய இவை அனைத்தும் உணர்ந்து இறும்பூது மிக
கொண்டான் அன்னகாலை - ஆகிய இவைகள்
|