பக்கம் எண் :

குசேலோபாக்கியானம்367


எல்லரவற்றையும் அறிந்து மிகுந்த வியப்பைக் கொண்டவன் ஆனான். அந்தப்
பொழுது.

   (வி - ம்.) தன்பாலுள்ள அறியாமை முன்னர் நீங்கியது போல இப்போது
வறுமையும் நீங்கியது, என உவமை கூறினர். வழி நடந்த இளைப்பு மாறிற்று;
வெயில் குளிர்ந்தது; பாலை வனமும் சோலையாகி நீர் ஊறும் இடமாயிற்று.
இளங்காற்று வீசிற்று; இம்மாறு பாடு கண்டு குசேலன் வியப்புற்றான். பாய - பரவிய.
கால் - காற்று. இறும்பூது - வியப்பு (ஆச்சரியம்).                    (525)

            சந்தக் கலிவிருத்தம்
ஒழுகுங்கட வரையுங்கதி ருறழ்செம்பொ னிரதமும்
எழுவெங்கதி உளைபொங்கிய இயல்தங்கிய பரியுங்
கொழுநின்றவை அயில்கொண்டவர் குழுவும்பல குழுமப்
பழுதென்பதி லவர்மன்னவர் பலர்வந்தெதிர் கொண்டார்.

   (சொ - ள்.) ஒழுகும் கடம்வரையும் கதிர்உறழ் செம் பொன் இரதமும்
எழுவெம்கதி உளைபொங்கிய இயல்தங்கிய பரியும் - சொரிகின்ற மதநீரையுடைய
மலைபோன்ற யானையும் ஒளி பொருந்திய செம்பொன்னாலான தேரும் எழுகின்ற
கொடிய வேகத்தையுடைய பிடரிமயிர் அமைந்த இலக்கணம் அமைந்த குதிரையும்,
கொழுநின்ற வை அயில் பொண்டவர் குழுவும் பல குழும - நுனி அமைந்த
கூர்மையையுடைய அயிற்படை கொண்ட வீரர்கள் கூட்டங்கள் பல திரண்டு
உடன்வர, பழுது என்பது இல்லவர் மன்னவர் பலர் வந்து எதிர் கொண்டார் -
குற்றம் ஒரு சிறிதும் இல்லாதவர்களாகிய அரசர்கள் பலர் வந்து குசேலனை
வரவேற்றார்கள்.

   (வி - ம்,) கடம் - மதம். கடம் ஒழுகு வரை - மதமொழுகும் மலை. இது
குறிப்பினால் யானையை யுணர்த்தியது. மன்னவர் பலர், யானை, பரி, தேர், வீரர்கள்
சூழ வந்து எதிர் கொண்டார்கள் குசேலனை என்பது கூறப்பட்டது. (526)

மணிவார்முடி மண்தோய்தர மறைமாமுனி தாளிற்
பணிவார்சிலர் துதிப்பார்சிலர் படரன்பினில் வழிபட்
டணிவார்சிலர் பார்ப்பார்சிலர் ஆர்ப்பார்சில ராகிக்
கணிவார்புய விறல்வேந்தர்கள் கழலாக்களிப் புற்றார்.

   (சொ - ள்.) மணிவார் முடி மண் தோய்தர மறை மாமுனிதாளில் பணிவார்
சிலர் - மணிகள் அழுத்திய பெரிய மகுடங்கள்