பூமியில் பொருந்த வேத முனிவனாகிய குசேலர்
திருவடிகளில் வணங்குவார்கள்
சிலர், துதிப்பார் சிலர் படர் அன்பினில் வழி பட்டு அணிவார் சிலர் பார்ப்பார்
சிலர் ஆர்ப்பார் சிலர் ஆகி - புகழ்வார்கள் சிலர், மிகுந்த அன்பினால் வழிபாடு
செய்து
அலங்காரம் புரிவார்கள் சிலர், சிலர் பார்த்துக் கொண்டிருப்பார்கள், சிலர் ஆரவாரம்
செய்கின்றவர்களுமாகி; கணிவார்புயம் விறல் வேந்தர்கள் கழலா களிப்பு உற்றார் -
மாலையணிந்த நீண்ட தோள்களையுடைய வெற்றி மன்னர்கள் நீங்காத மகிழ்ச்சி
அடைந்தார்கள்.
(வி - ம்.) மணிமுடி மன்னர் பலரும் வந்து வணங்கித் துதித்து வழிபட்டுப்
பார்ப்பாரும் ஆர்ப்பாரும் அணிவாருமாகி நீங்கா மகிழ்வடைந்தார் என்பது. கழலா -
நீங்காத. ஆர்ப்பார் என்பது கண்ணனைக் கண்ட குசேலர் வந்தார் வந்தார் என்று
கூறி ஆரவாரஞ் செய்வர் என்ற பொருளைத் தந்தது. (527)
பொன்னார்வட வரைமேற்கதிர்ப் புத்தேளெனப் பொலிய
மின்னார்கதிர் உமிழும்மொரு வியன்மாமணித் தேர்மேல்
முன்னார்மறை யோனைப்பல முகமன்புகன் றேற்றி
நன்னாரொடு பெருவேந்தர்கள் சூழாநடந் தனரால்.
(சொ - ள்.) பொன் ஆர்வட வரைமேல் கதிர் புத்தேள் என பொலிய
மின்
ஆர்கதிர் உமிழும் ஒரு வியன் மாமணி தேர் மேல் - பொன் நிறைந்த
வடக்கிலுள்ள மேரு மலைமீது ஒளியையுடைய ஞாயிறு போல விளங்கும்படி
மின்னலை ஒத்த ஒளியைச் சொரிகின்ற ஒப்பற்ற பெரிய சிறந்த மணிகள் கட்டிய
தேரின்மீது, முன்ஆர் மறையோனை பலமுகமன் புகன்று ஏற்றி நல் நாரொடு பெரு
வேந்தர்கள் சூழா நடந்தனர் - தமக்கு முன் அமர்ந்துள்ள மறையவனைப் பல
உபசார மொழிகள் சொல்லி ஏறச்செய்து சிறந்த அன்புடன் பெரு மன்னர்கள் பலர்
சூழ்ந்து நடந்து வந்தார்கள்.
(வி - ம்.) வந்த மன்னர்கள் குசேலனைப் பெரிய தேரின் மேல்
ஏற்றுவித்து
அன்புடன் சுற்றி நடந்து வந்தார். குசேலனைத் தேர்மேலேற்றியது பொன்மலைமேற்
சூரியன் புறப்பட்டது போல இருந்தது என உவமை கூறினார். (528)
மண்ணென்பது தெரியாவகை வானத்திடை அமரர்
கண்ணென்பது நுழையாவகை கற்பத்தரு மலரை
எண்ணென்பதும் இன்றாம்வகை இறைத்தார்களித் தார்த்தார்
புண்ணென்பது பொலிவேலவர் பூத்தா ரிறும்பூது.
|