(சொ - ள்.) மண்
என்பது தெரியாவகை வானத்து இடை அமரர் கண்
என்பது நுழையாவகை கற்பதரு மலரை எண் என்பதும் இன்று ஆம்வகை
இறைத்தார் - தரை தெரியாதபடி ஆகாயத்தில் தேவர்கள் கண்கள் சென்று பார்க்கக்
கூடாதபடி கற்பகமரத்தின் மலர்களைக் கணக்குச் சொல்லக்கூடாத முறையில்
குசேலன்மீது சொரிந்தார்கள், களித்து ஆர்த்தார் புண் என்பது பொலி வேலவர்
பூத்தார் இறும்பூது - மகிழ்ச்சியால் ஆரவாரித்தார்கள் ஊண் நிறைந்த வேற்படை
மன்னர்கள் வியப்பு மிகுந்தார்.
(வி - ம்.) வானத்தில் அமரர்கள் நின்று மலர்மாரி பொழிந்தனர்
மகிழ்ச்சியால்.
அது கண்டு மன்னர்கள் மகிழ்ச்சியால் ஆர வாரஞ் செய்தார்கள், மண் தெரியாவகை
எண் என்பது இன்றாம் வகையிறைத்தார் எனக் கூட்டுக. இறும்பூது பூத்தார் என்க. (529)
கடல்மேலெழுந் தார்த்தாலெனக் கடல்நீருறப் பருகி
உடன்மேகங்க ளார்த்தாலென உயர்வான்முக டதிர
மடல்மேலெழு தார்வானவர் வண்டுந்துபி யைந்தும்
விடல்மேலுள தாகாவகை மேலும்பெரி தார்த்த
(சொ - ள்.) கடல்மேல் எழுந்து ஆர்த்தால் என கடல் நீர் உற
பருகி உடன்
மேகங்கள் ஆர்த்தால் என உயர் வான்முகடு அதிர - கடல்மேல் எழும்பி
முழங்கினாற் போலக், கடல்நீரை மிகுதியாகக் குடித்து ஒருசேர மேகங்கள் ஒலித்தாற்
போலவும் மேலுள்ள வானத்தின் உச்சி அதிர்ச்சியடைய, மடல்மேல் எழுதார்
வானவர் வண்துந்துபி ஐந்தும் விடல்மேல் உளது ஆகாவகை மேலும் பெரிது
ஆர்த்த - இதழ்கள் மேலெழுந்த மாலையணிந்த தேவர்களுடைய பெருமையான
துந்துபி வாத்தியங்கள் ஐந்தும் இடையீடில்லாதபடி, மேலும் சிறப்பாக முழங்கின.
(வி - ம்.) கடல் மேலெழுந்து பொங்கி ஒலித்தது போலவும் மேகம்
முழங்கியது போலவும் வானம் நடுங்க ஐவகைத் துந்துபியும் ஆர்த்தன. (530)
கலிநிலைத்துறை
அளவி லாமகிழ் தலைசிறந் தோங்கிட அவிர்ந்து
பளகி லாதுயர் தருப்படர் கொடியசைந் தென்ன
வளநி லாவிய மின்னுகள் நடித்தென மணிவாய்த்
தளவ மூரல்விண் மடந்தையர் நடித்தனர் தயங்க.
|