(சொ - ள்.) அளவு
இலா மகிழ்தலை சிறந்து ஓங்கிட அவிர்ந்து பளகு இலாது
உயர்தரு படர்கொடி அசைந்தென்ன - எல்லையில்லாத மகிழ்ச்சி மிகச் சிறக்க
விளங்கிக் குற்றமில்லாமல் உயர்ந்த கற்பகத்தின்மேல் படர்கின்றகொடியானது
அசைந்தாற் போல, வளம் நிலாவிய மின்னுகள் நடித்துஎன மணிவாய் தளவம் மூரல்
விண் மடந்தையர் நடித்தனர் தயங்க - வளப்பம் பொருந்திய மின்னல்கள்
நடித்தாற்போலப் பவளம் போன்ற வாயையும் முல்லையரும்பு போன்ற
பற்களையுமுடைய தேவமாதர் விளக்கமாக நடித்தனர்.
(வி - ம்.) பூங்கொடிகள் அசைந்தனபோல மின்னல் அசைந்தன போல
வானரம்பையர் மகிழ்ச்சியுடன் நடித்தனர். (531)
பிரக லாதனன் பராசரன் பெருஞ்சவு னகன்சீர்
வரவி யாதனம் பரீடன்புண் டரீகன்முன் மற்றோர்
கரவி லாதவுள் ளத்தராய்க் கழிமகிழ் சிறப்ப
விரவி நின்றுதோத் திரமெடுத் தியம்பினர் மேன்மேல்.
(சொ - ள்.) பிரகலாதனன் பராசரன் பெருசவுநகன் சீர் வரம் வியாதன்
அம்பரீடன் புண்டரீகன் முன் மற்றோர் - பிரகலாதன், பராசரன், பெருமையுள்ள
பவுநகன், சிறந்த மேன்மை பொருந்திய வியாதன், அம்பரீடன், புண்டரீகன் முதலான
மற்றவர்களும்; கரவு இலாத உள்ளத்தர் ஆய் கழி மகிழ் சிறப்ப விரவிநின்று
தோத்திரம் எடுத்து இயம்பினர்மேன்மேல் - வஞ்சக மில்லாத மனமுடையவர்களாய்
மிகுந்த மகிழ்ச்சி பொங்கக் கூடி நின்று மேலும் மேலும் தோத்திரங்கள் பல
சொன்னார்கள்.
(வி - ம்.) பிரகலாதனன் முதலிய பல முனிவர் வானின் நின்று துதி
புரிந்து
குசேலனை வாழ்த்தினர் என்க. வைணவ மதத்திற்குரிய முனிவரிற் சிறந்தோர்
இவர் எனக் காண்க. (532)
இன்ன பல்வகை அதிசய மெதிருறக் கண்டு
நன்னர் மாமறைக் குலத்தவன் நாயகன் பாதத்
துன்னு நெஞ்சகம் பெயர்த்திலன் உறுவன வெல்லாம்
பன்னும் எம்பிரா னருளென நினைத்தனன் படர்வான்.
(சொ - ள்.) இன்ன பல்வகை அதிசயம் எதிர் உறக் கண்டு - இப்படிப்பட்ட
பலவகையான வியப்பளிக்கும் நிகழ்ச்சிகளைப் பார்த்து, நன்னர் மாமறை குலத்தவன்
நாயகன் பாதத்து உன்னும்
|