நெஞ்சகம் பெயர்த்திலன் - நல்ல பெரிய
வேதிய குலத்தவனாகிய குசேலன்
கண்ணபிரானுடைய திருவடியில் நினைக்கின்ற மனதை வேறு படுத்தாதவனாய்,
உறுவன எல்லாம் பன்னும் எம்பிரான் அருள் என நினைத்தனன் படர்வான் -
நிகழ்வன யாவும் சொல்லப் பெறுகின்ற எம்தலைவனாகிய கண்ணனுடைய
திருவருளே என்று எண்ணி மேற்சொல்லலானான்.
(வி - ம்.) குசேலன் இத்தகைய பெருஞ் செல்வம் அடைந்தது கண்டும்
கண்ணன் திருவடியை விட்டுப் பெயராத நெஞ்ச முடையவனாய் எல்லாம் அவன்
திருவருளே என நினைந்து சென்றான். நினைத்தனன் : முற்றெச்சம்; நினைத்து
என்பது பொருள். (533)
அரச ரேமுத லாயினார் அனைவரும் அடுத்துப்
பரசி யேவலர் போற்பிரி யார்பின்பு படரப்
புரசை மால்கரி பரிமுதல் படைகளும் பொலியத்
தரைசெய் பேறென விளங்குதன் ஊர்ப்புறஞ் சார்ந்தான்.
(சொ - ள்.) அரசர் முதல் ஆயினர் அனைவரும் அடுத்து பரசி ஏசலர்
போல்
பிரியார் பின்புபடர - அரசன் முதலான வரைப் போல நீங்காமல் பின்
தொடர்ந்தனர், புரசைமால் கரிபரி முதல் படைகளும் பொலிய தரை செய் பேறு என
விளங்கு தன் ஊர்புறம் சார்ந்தான் - கழுத்திடு கயிற்றையுடைய பெரிய யானைகள்,
குதிரைகள் முதலிய படைகளும் விளங்க இந்நிலவுலகத்திலுள்ளோர் செய்த நற்பயன்
என்று சொல்லும்படி விளங்குகின்ற தனது ஊர்ப்புறத்தைச் சார்ந்தான்.
(வி - ம்.) புரசை - யானைக் கழுத்திடு கயிறு. காவலர் பலரும்
ஏவலர்போலத்
தன் பின்றொடர்ந்துவரக் கரி பரி தேர் காலாட்படை சூழச்சென்று
தன்னூர்ப்புறஞ்சார்ந்தான் குசேலன் என்பது. பரசி - துதித்து. (534)
பரியும் நீள்பழங் கந்தைகொ ளுடையனிப் பரிசு
பெரிய மாதவர் வேந்தர்கள் முதலியோர் பெரிதுந்
தெரியு மாபுகழ்ந் தேத்திடச் சிறந்தனன் என்னில்
உரிய தாகிய தவத்தினில் உயர்ந்ததொன் றுண்டோ.
(சொ - ள்.) பரியும் நீள் பழங்கந்தை கொள் உடையன் இப்பரிசு
பெரிய
மாதவர் வேந்தர்கள் முதலியோர் - இரங்கத்தக்க நீண்ட பழைய கந்தல் துணியை
உடையாகக் கொண்டவன் இங்
|