பக்கம் எண் :

372 குசேலோபாக்கியானம்

ஙனம் பெரிய தவத்தோர் அரசர்கள் முதலியவர்கள், பெரிதும் தெரியும் ஆ புகழ்ந்து
ஏத்திட சிறந்தனன் என்னில் உரியது ஆகிய தவத்தினில் உயர்ந்து ஒன்று உண்டோ
- மிகுதியும் தெரிந்த வகையில் புகழ்ந்து துதிக்கச் சிறப்படைந்தனன், ஆராயுமிடத்து
உரிமையதான தவத்தைப் பார்க்கிலும் மேம்பட்ட ஒருபொருள் உளதோ? (இல்லை)

   (வி - ம்.) பழங்கந்தை உடையுடையவன் மிகவும் வறுமை யுடையவன்
ஆகிய குசேலன் இத்தகைய பெருஞ் செல்வச் சிறப்புப்பெற்றான் என்றால் இதற்குக்
காரணம் அவன் செய்த தவமேயாம். ஆதலால் தவத்தினும் உயர்ந்தது உலகத்தில்
ஒன்றும் இன்று என்றார் ஆசிரியர். இது வேற்றுப் பொருள் வைப்பணி.    (353)

என்று ரைத்தமா முனிவரன் இணையடி இறைஞ்சி
நன்று சொற்றனை மற்றது நடத்துகென் றடையார்க்
கொன்றி ரத்தம்வாய் மடுத்திடும் வாட்படைக் குரிசில்
துன்றும் அற்பொடு கேட்டலுஞ் சுகமுனி சொல்வான்.

   (சொ - ள்.) என்று உரைத்த மாமுனிவரன் இணை அடி இறைச்சி - என்று
சொல்லிய பெரிய முனிவராகிய சுகமுனிவருடைய இரண்டு திருவடிகளையும்
வழிபட்டு, நன்று சொற்றனை மற்றதும் நடத்துக என்று - நன்றாகச் சொன்னாய்
மேலுள்ளதையும் சொல்வாயாக என்று, அடையார் கொன்று இரத்தம் வாய்
மடுத்திடும் வாள் படை குரிசில் துன்றும் அற்பொடு கேட்டலும் சுகமுனி சொல்வான்
- பகைவரை அழித்துக் குருதியைப் பருகுகின்ற வாள்படையையுடைய பரீட்சித்து
மன்னன் நிறைந்த அன்புடன் வேண்டிக்கொள்ள, சுகமுனிவன் மேலும் கூறுவான்.

   (வி - ம்.) வாட்படைக் குரிசில் - பரீட்சித்து வேந்தன். குறை வரலாறுங்
கூறுகவெனக் கேட்டான் மன்னன்; சுகமுனிவன் எஞ்சிய வரலாற்றையும் இனிக்
கூறுகின்றான்.                                            (536)
                           _______