|
வஞ்சிநுண்
ணிடையி னார்மேல்
மாடமே டையினி
ருந்து
வெஞ்சினப் புலவி மூள
மணிவடம் வெறுத்த
தோளில்
அஞ்சுமூ டலின்விண் மாதர்
எறிந்தமுத்
தாரம் வீழ
விஞ்சைவல் லவனங் கேள்வன்
எனவுளம் வியந்து
கொள்வார்.
(சொ - ள்.) வஞ்சி நுண் இடையினார் மேல் மாட மேடையில் இருந்து
வெம்
சினம் புலவி மூள மணி வடம் வெறுத்த தோளில் - கொடி போலு நுண்ணிய
இடையினையுடைய மங்கையர் உப்பரிகையின் நிலா முற்றத்திலிருந்து வெவ்விய
சினத்தோடு கூடிய ஊடல் மிகுதலால் முத்து வடத்தை வெறுத்து வீசிப் பின் (வறிதாயுள்ள)
தந் தோள்களில்; அஞ்சும் ஊடலின் விண் மாதர் எறிந்த முத்து ஆரம் வீழ விஞ்சை
வல்லவன் நங் கேள்வன் என உளம் வியந்து கொள்வார் - விண்ணுலகத்துள்ள அர
மகளிர் (தம் கணவர் மீது கொண்ட) அஞ்சத் தக்க ஊடலால் சுழற்றி வீசிய முத்து
மாலை (இவண் வந்து) வீழக் கண்டு மந்திர வித்தையில் வல்லவன் நம் கணவன் என்று
தம் மனத்திடை இறும்பூதடைவார்கள்.
(வி - ம்.) மேன் மாடத்தின் மங்கையர் தங் கணவரோடு ஊடி மணி
வடத்தைக்
கழற்றி யெறிவார் என்றும், அவ்வமயம் விண்ணுலக வரம்பையர் புலவியால் கழற்றி
யெறிந்த முத்தாரங் கழுத்தில் விழும் என்றும், அதனை யறியாது மயங்கித் தங் கணவர்
மந்திர வித்தை வல்லவர் என்று வியப்படைவார் என்றும் கூறினார். அரம்பையர் வீசி
யெறிந்த முத்தாரம் அந் நகர மங்கையர் கழுத்தில் விழும்படி பொன்னுலகம் அண்மையில்
இருந்தது என்று அறிக.
(552)
சுதைபயில் மாடந் தோறுஞ்
சுடர்மதி தவழுந்
தோற்றங்
குதைவரிச் சிலையை வாட்டுங்
கோடிய புருவம்
நுண்கூர்ப்
புதையிகல் கண்ணி னாரம்
போருக முகத்தை
நேரத்
ததையுடற் களங்கந் தேய்த்துக்
கழிப்பது தகையு
மன்றே.
|