பக்கம் எண் :

குசேலோபாக்கியானம்509


பயன் பெறுவாய் ஒன்று மின்றே என்றும் கூறிவியந்தான். மேகங்கைம்மாறு கருதாது
மழை பொழிவது போல அருற் மழை பொழிகின்றாய் நி என்பது வையத்து
வாழ்வார் மாட்டும் மழை பெறும் பொருளுமுண்டோ என்ற பொதுப் பொருளால்
முடித்ததால் இது வேற்றுப்பொருள் வைப்பணி.                     (722)

தழலராத் தலையில் வைத்து நடித்தும்வெஞ் சகடு தைத்தும்
நிழலில்கான் நடந்து முன்னம் பழக்கினை நின்பொற் றாளை
அழல்செயு மடியே னெஞ்சத் தமைத்திடு நிமித்தங் கொல்லோ
கழறரா வினையி னேனின் றறிந்தனன் கடவு ளேறே.

   (சொ - ள்.) கடவுள் ஏறே அழல் செயும் அடியேன் நெஞ்சத்து அமைத்திடும்
நிமித்தம் கொல்லோ - தெய்வங்களிற் சிறந்த தெய்வமாயுள்ளானே, (நீ)
வெம்மையைச் செய்கின்ற அடியேனது மனத்தில் இற்றை நாளில் அமைத்
திருத்தற்காங் காரணம் பற்றியோ; தழல் அரா தலையில் வைத்து நடித்தும்
வெஞ்சகடு உதைத்தும் நிழல் இல் கான் நடந்தும் முன்னம் பழக்கினை நின் பொன்
தாளை - (நஞ்சாகிய) தீயையுடைய பாம்பின் தலையின் மேலூன்றி நடஞ் செய்தும்,
கொடிய சகடத்தை யுதைத்தும், நிழலில்லாத காட்டிடத்து நடந்தும் உனது
பொன்போன்ற திருவடிகளை முன்னாளிலேயே பழக்கி வைத்துள்ளனை; கழல் தரா
வினையினேன் இன்று அறி்ந்தனன் - விடுதலில்லாத வினையையுடையேனாகிய
அடியேன் (இப்பெற்றியை) இன்று அறிந்து கொண்டேன்.

   (வி - ம்.) கடவுள் ஏறே என்றது தெய்வங்களுட் சிறந்த தெய்வமே என்று
துதித்தாம். தழல் தராவினையினேன் - நீங்காத பாவமுடையேன். அழல் செயும்
நெஞ்சம் என்றது இரங்காத மனம் என்ற பொருளைத் தந்தது. இரக்கமுள்ள நெஞ்சம்
தண்ணென்று (குளிர்ந்து) இருக்கும் என்பதையறிக. என் வன்கண் மையுடைய
நெஞ்சில் வந்து நிற்பதற்காகவோ நீ முன்னாளிற் பாம்புத் தலையின நடித்துச்
சகடாசுரனை உதைத்துக் காட்டில் நடந்து நின் பொன்னடியைப் பழக்கினை என்றும்
புகழ்ந்தான்.                                               (723)

புன்றொழி லடியே னுள்ளம் போருகப் பாதம் வைப்பிற்
கன்றுத லின்றி முன்னைப் பழக்கத்தாற் கலங்கா தாற்று
மென்றளிர் மேனிப் பூமேல் விளங்கிழைத் தாயர் கைகட்
கொன்றுமப் பாத வெப்ப முறுமென அஞ்சு கின்றேன்.

   (சொ - ள்.) புல்தொழில் அடியேன் உள் அம்போருகம் பாதம் வைப்பின் -
இழி தொழிலையுடைய அடியேனது மனத்தில்,