|
தாமரை மலர் போலுந் திருவடிகளை வைத்தால்;
கன்றுதல் இன்றி முன்னை
பழக்கத்தால் கலங்காது ஆற்றும் - நைதலில்லாமல், முந்திய பழக்கத்தால் (அத்
திருவடிகள்) வருந்தாமற் பொறுக்கு மாயினும்; மெல் தளிர் மேனி பூமேல் விளங்கு
இழை தாயர் கைகட்கு ஒன்றும் அப்பாதம் வெப்பம் உறும் என அஞ்சுகின்றேன் -
மெல்லிய தளிர் போலும் நிறத்தினையுடைய, தாமரை மலரில் வாழ்கின்ற,
தாய்மார்களின் கைகளில், பொருந்திய அந்தத் திருவடிகளின் வெம்மையானது,
உறுத்துமென் றஞ்சுகின்றேன்.
(வி - ம்.) புன்றொழில் - பாவச் செயல். அம்போருகம் - தாமரை.
நின்
பொன்னடி என்னெஞ்சின் வெம்மையைப் பொறுக்கும் ஆயினும் அவ்வடிகளைத்
தாமரைப் பூவில் வாழ் தையலார் (இலக்குமிகள்) மெல்லிய கைளால் வருடும்போது
காந்துமே என்று நான் அஞ்சுகின்றேன் என்றும் கூறினன். (724)
என்றுபற் பலவும் பேசி
இருந்தழ லிட்ட
வெண்ணெய்
ஒன்றிய கருங்க லென்ன
வுள்ளநெக் குருக
நேரே
நின்றவந் தணனை நோக்கி
நெடியமால் கருணை
பூத்து
வென்றிமா தவத்த ரேறே
வேட்டதென்
நுவறி யென்றான்.
(சொ - ள்.) என்று பல் பலவும் பேசி இருதழல் இட்ட வெண்ணெய்
ஒன்றிய
கருங்கல் என்ன உள்ளம் நெக்கு உருக நேரே நின்ற அந்தணனை நோக்கி -
என்றிவ்வாறு பல பல கூறித் துதித்து, பெருந்தீயிலிட்ட வெண்ணெயானது
பொருந்திய கருங்கல் லென்று கூறும்படி மனமானது நெகிழ்ந்துருக எதிர்நின்ற
வேதியனாகிய குசேலனை நோக்கி்; நெடியமால் கருணை பூத்து வென்றி மாதவத்தர்
ஏறே வேட்டது என் நுவறி என்றான் - பெரியோனாகிய திருமாலானவர் (புலன்களை
யடக்கிய) வெற்றி யையுடைய, தவத்தினருள்ளே சிறந்துள்ளவனே, நீ விரும்பிய
தியாது கூறுதி யென்றான்.
(வி - ம்,) வேட்டது - விரும்பியது. நுவறி - சொல்வாய். நெக்கு
- நெகிழ்ந்து.
தீயிலிட்ட வெண்ணெயினும் மிகவும் உருகியது என்பதைக் காட்ட "கருங்கல்
என்ன" என்றார். தீயிலிட்ட வெண்ணெய் உருகிய நெகிழ்ச்சியைக் கண்டோர்
கருங்கல் என்று கூறுமாறு உருகியது மனம் என்பது. மனவுருக்கமும் வெண்ணெ
|