|
யுருக்கமும் ஒப்பு நோக்கின் வெண்ணெயுருக்கம்
கருங்கல் என்று கூறும்படி மனவுருக்கம்
சிறந்தது தோன்றும் என்பது கருத்து. தவத்திற்கு வெற்றியாவது ஐம்புலன்களையும்
அடங்கியாள்வது. திருமால் குசேலனை நோக்கி நீ விரும்பியது யாது கூறுக என்றான்
என்பது.
(725)
அடியனே னுய்ந்தே னென்னா
அங்கைக ளிரண்டுங்
கூப்பி
முடிமிசை யேற்றி நின்று
மூதறி வுடையோர்
கொள்ளாக்
கொடியவிச் செல்வ மொன்றே
குணிப்பரும்
பவத்திற் கேது
படிறற வாயி லின்பம்
பயப்பதெட்
டுணையு மின்றால்.
(சொ - ள்.) அடியனேன் உய்ந்தேன் என்னா அம் கைகள் இரண்டும்
கூப்பி
முடிமிசை ஏற்றி நின்று - அடியேனாகிய யான் பிழைத்தே னென்று மொழிந்து அழகிய
கைகளிரண்டையுங் குவித்து, உச்சியின்மீ துயர்த்தி வணங்கியவனாய் நின்று முது அறிவு
உடையோர் கொள்ளா கொடிய இச்செல்வம் ஒன்றே குணிப்பு அரும் பவத்திற்கு ஏது
- பேரறிவுடையோர் மதிக்காத, கொடிதாகிய இந்தச் செல்வ மொன்றுமே, அளவில்லாத
பிறவிகளுக்குக் காரணமாவது; படிறு அற ஆயின் இன்பம் பயப்பது எட்டுணையும்
இன்றால் - படிறுஅற ஆயின் இன்பம் பயப்பது எள் இன்பந்தருதல் இல்லையாம்.
(வி - ம்.) குணிப்பு அரும் - கணக்கிட முடியாத. பவம் - பிறவி.
திருமால்
வினவியபோது குசேலன் இச்செல்வம் அளவிறந்த பிறவிக்கு ஆளாக்கும்; இன்பம்
பயப்ப தொன்றுமில்லை யென்று நான் அறிந்தேன் என்று கூறிப் பின்னும் கூறுவான்.
எள்+துணை=எட்டுணை, எள்ளின் அளவு. (726)
மனமொழி யுடல மென்ன
வகுத்திடு கரண
மூன்றுந்
தினமுநின் றிருவ டிக்கே
செலுத்துநா யடியே
னிந்தக்
கனவெனுஞ் செல்வத் தாழ்ந்தோ
களித்துநாள்
கழியா நிற்பன்
உனதடி யவர்பூந் தாளி
லுறப்பணிந்
துய்த னீக்கி
|