|
(சொ - ள்.) மனம்
மொழி உடலம் என்ன வகுத்திடு கரணம் மூன்றும்
தினமும் நின் திருஅடிக்கே செலுத்தும் நாய் அடியேன் - மனம் வாக்கு காயம்
என்று வகுக்கப்பட்ட முக்கரணங்களையும், நாள்தோறும் உனது திருவடிகட்கு (அன்பு
செய்து துதித்து வழிபடுதலிலேயே) செலுத்துகின்ற, நாயினியல்புடைய அடியேன்;
உனது அடியவர் பூதாளில் உற பணிந்து உய்தல் நீக்கி - உன தடியார்களின்
தாமரை மலர்போலுந் திருவடிகளிற் பெரிதும் பணிந்துய்தலை விட்டு; கனவு எனும்
செல்வத்து ஆழ்ந்தோ நாள் கழிப்பன் - கனவு போன்ற செல்வ வாழ்க்கையில்
அழுந்திக் களிப்படைந்தோ, வாழ்நாளை (வீணாளாகக்) கழிப்பேன்.
(வி - ம்.) மூன்று கரணம், மனம் மொழி மெய் என்பன. மூன்றும்
ஒன்றுபட
நின் திருவடிக்கட் செலுத்தும் அடியேன்யான். எனக்கு வேண்டுவது
அடியார்கூட்டமே. கனவு போன்ற செல்வம் வேண்டுவதின்று என்பது குறிப்பு
கனவிற கண்ட பொருள் யாவும் மறைவது போல வந்து செல்வம் யாவும்
மறைந்துபோம். இவ்வாறு நிலையில்லாச் செல்வ வாழ்வு வேண்டேன் யான் என்று
குறிப்பாகக் கூறினன்.
(727)
முன்னரே வெறுத்து வேண்டா
இதுவென முனிந்து
செல்வம்
பின்னர்க்கைக் கொள்வே னாகிற்
பேரறி வுடைய
னன்றே
அன்னது மன்றிக் கொண்ட
விரதமு மழித்தா
னானேன்
நன்னர்நெஞ் சுடைய நீரார்
நகைக்குநா ணாது
நின்றேன்.
(சொ - ள்.) முன்னரே வெறுத்து வேண்டா இது என முனிந்து செல்வம்
பின்னர் கை கொள்வேன் ஆகில் பேர் அறிவு உடையன் அன்றே -
முதற்கண்ணேயே வெளிப்பற்று இதுவேண்டு கிலேனென்று, வெறுத்து (அந்தச்)
செல்வத்தைப் பிறகு கைப் பற்றுவேனாயின், (நான்) பேரறிவுடையேனல்லன்,
அன்னதும் அன்றிகொண்ட விரதமும் அழித்தான் ஆனேன் - அதுவுமல்லாமல்
கொண்டுள்ள விரதத்தையும் அழித்தவனானேன்; நன்னர் நெஞ்சு உடைய நீரார்
நகைக்கும் நாணாது நின்றேன் - நல்ல மனமுடைய பெரியோர்களது நகைத்தலுக்கும்
நாணாதவனாயிருக்கின்றேன்.
(வி - ம்.) நன்னர் - நன்மை. நீரார் - இயல்புடையவர், தனிமையுடையவர்:
நான் முன் செல்வத்தை வெறுத்து இப்போது
|