வாழ்த்து
மன்னு
மாமறை வாழி மறையவர்
பன்னு
மான்முகில் வாழிநற் பார்த்திபர்
மின்னு
நீதியும் வாழி மிகுநலம்
என்னு
மிக்கதை யின்றமிழ் வாழியே.
(சொ - ள்.) மன்னும் மாமறை வாழி, மறையவர் பன்னும் மால்முகில்
வாழி, நல்
பார்த்திபர் மின்னும் நீதியும் வாழி, மிகு நலம் என்னும் இக்கதை இன்தமிழ் வாழி
-
நிலைபெற்ற பெருமையுள்ள வேதங்கள் வாழ்க, அந்தணர்கள் புகழும் பெரிய மேகங்கள்
வாழ்க, நல்ல அரசர்களால் ஓம்பப்பட்டு விளங்குகின்ற நீதியும் வாழ்க, மிக்க
நன்மையுடையத்தென்று கூறும் இக்கதையிற் பயிலும் இனிய தமிழும் வாழ்க.
(வி - ம்.) மன்னும் - நிலைபெற்ற. மறை - வேதம். பார்த்திபர்
- அரசர். இது
வாழ்த்துக் கூறியது. மறை, மேகம், மன்னர், நீதி, இக்கதை, இனியதமி்ழ், எல்லாம்
வாழ்க
என்பது. (746)
குசேலோபாக்கியானம்
முற்றிற்று.
--------
|