பக்கம் எண் :

குசேலோபாக்கியானம்523


கரசனாகிய பரிட்சித்து மன்னனே! இந்தக் கதையை எழுதிவைப்போர்களும், நிறைந்த
அன்போடு கேட்போர்களும், போற்றி வழிபடுவோர்களும், படிப்போர்களுமாகிய
எல்லோரும் ; கதிர்தருசெல்வம் பெற்று கால் முளை பல்க வாழ்த்து மதிநலம் படைத்து
பின்னர் வான் கதி அடைந்து வாழ்வார் - ஒளியைத் தருகின்ற செல்வத்தைப் பெற்று,
மக்கள் பெருக வாழ்ந்து, அறிவின் நலத்தைப் பெற்றுப் பின்னர் மேலான கதியையடைந்து
வாழ்ந்திருப்பார்கள்.

   (வி - ம்.) அரசர் ஏறே என்றது பரிட்சித்துவை. இக் கதையை எழுதினார்,
கேட்போர், பூசிப்போர், படிப்போர் அனைவரும் செல்வம் பெற்று நன்மகப்பேறு அறிவு
நலம் பெற்று வாழ்ந்து பின் வைகுந்தம் சென்று வாழ்வார் என நூலாசிரியர் பெருமை
கூறினர் என்க. 'எழுதினோர்' : பண்டைக் காலத்து அச்சுப்பொறி தோன்றாமையால்
நாற்பொருள் பயக்கும் நன்னூல்களைக் கூலிபெற்றெழுதுவாரும் விற்பனைப் பொருட்டு
எழுதுவாருமுளர். அதுவுமன்றிப் புண்ணியப் பேற்றின்பொருட்டும் கை திருந்தற்
பொருட்டும் எழுதுவாருமுளர்.                               (744)

                       நூன்முடிவு
                      கலிவிருத்தம்

               என்று ரைத்த முனிவ னிணையடி
               ஒன்று மன்பின் வணங்கி யுவந்தெழீஇத்
               துன்று மிக்கதை கேட்டின்பந் தோய்ந்தனன்
               மன்ற வென்றுரைத் தான்புவி மன்னவன்.

   (சொ - ள்.) என்று உரைத்த முனிவன் இணை அடி புவி மன்னவன் ஒன்றும்
அன்பின் வணங்கி உவந்து எழீஇ - என்று (குசேலன் வரலாறு) கூறிய சுகமுனிவன்
இரண்டு திருவடிகளையும், நிலவுலகத்தரசனாகிய பரிட்சித்து மன்னன் பொருந்திய
அன்பி்ல் வணங்கி மனமகிழ்ந்தவனாய், எழுந்து ; துன்றும் இக்கதை கேட்டு இன்பம்
மன்ற தோய்ந்தனன் என்று உரைத்தான் - மிகுதியாகிய இக்கதையினைக் கேட்டு,
இன்பத்தில் மிகத்திளைத்தேனென்று கூறினான்.

   (வி - ம்.) எழீஇ - எழுந்து. இணையடி - இரண்டாகிய பாதங்கள் என்று கூறிய
சுகமுனிவன் இணையடிகளைப் பரிட்சித்து மன்னன் வணங்கி நான் இக்கதையைக்
கேட்டு இன்பமிகப் பெற்றேன் என்று கூறினன் என்பது.               (745)