னைச் சுகமுனிவர் அழைத்தது. நீருட் பலகாலங்
கிடப்பினும் ஈரம் பற்றாத
கிடையைப்போலப் பூமி வாழ்க்கையிற் பொருந்தாது மனம் இறைவனடியிலே பற்றி
நிற்கவே பலநாள் வாழ்ந்தான் குசேலன் என்றார். (742)
ஒப்பிலா முனிவன் பின்ன ரொருதினம் வான நாடர்
வெப்பிலாக் கற்ப கப்பூ விரைகெழு மாரி பெய்ய
வைப்பின்மெய் யடிவார்க் காய வைகுந்த வுலகஞ் சார்ந்து
திப்பிய வுருவ மாயன் சேவைசெய் தின்புற் றானே.
(சொ - ள்.) ஒப்பு இலா முனிவன் பின்னர் ஒருதினம் வானம் நாடார்
வெப்பு
இலா கற்பகம் பூ விரை கெழு மாரி பெய்ய- ஒப்பற்ற குசேலமுனிவன் பின்ன ரொருநாளில்
விண்ணுலகத்தவராகிய தேவர்கள் வெம்மையகன்ற (குளிர்ந்த) கற்பகமலர்களாகிய
மணங்கமழும் மழையைச் சொரிய ; மெய் அடியார்க்கு வைப்பின் ஆய வைகுந்த
உலகம் சார்ந்து திப்பியம் உருவம் மாயன் சேவைசெய்து இன்பு உற்றான் -
உண்மையடியார்களுக்கு எய்ப்பில் வைப்பாகவுள்ள திருவைகுந்தமாகிய
உலகத்தையடைந்து, அதிசய வடிவினனாகிய திருமாலின் காட்சியைக் கண்ணுற்றுப்
பேரின்பம் அடைந்திருந்தான்.
(வி - ம்.) விரை - மணம். மாரி - மழை. வைப்பு - சேமநிதி.
திப்பியம் -
திவ்வியம் ; மேன்மை, உயர்வு, சிறப்பு என்ற பொருளையுணர்த்தும் இது. இவ்வாறு
செல்வ வாழ்விலிருந்தே குசேலன் ஒருநாள் தேவர் மலர் மாரிபொழிய அடியார்க்கு
வைப்பு ஆகிய வைகுந்த வுலகஞ் சென்று மாயனைக் கண்டு பேரின்பம் பெற்றான்
என்க. (743)
நூற்பயன்
எதிர்பொரு
மரச ரேறே
இக்கதை
யெழுதி வைப்போர்
பொதிதரு மன்பிற்
கேட்போர்
பூசிப்போர்
படிப்போர் யாருங்
கதிர்தரு செல்வம்
பெற்றுக்
கான்முளை
பல்க வாழ்ந்து
மதிநலம் படைத்துப்
பின்னர்
வான்கதி
யடைந்து வாழ்வார்.
(சொ - ள்.) எதிர் பொரும் அரசர் ஏறே இக்கதை எழுதி வைப்போர்
பொதிதரும்
அன்பின் கேட்பார் பூசிப்போர் படிப்போர் யாரும் - பகைவரோ டெதிர்த்துப் போர்
செய்யும் அரசர்க்
|