பக்கம் எண் :

குசேலோபாக்கியானம்521


          ஓம்படைப் பெருமா னுள்ளம்
               உற்றதிவ் வாறே வென்று
          கூம்பலிற் பெயராக் கைய
               னாய்க்களி கூர்ந்தி ருந்தான்.

   (சொ - ள்.) பாம்பு அணை பள்ளிமேவும் பண்ணபன் மறைதலோடும் -
ஆதிசேடனாகிய பாம்பினை யணையாகக் கொண்டு துயில் கொள்ளும் திருமால்
மறைந்தனனாக உடனே ; தேம்பலின் தவிர்ந்த சிந்தை தெய்வம் மா முனிவர் கோமான்
- வாட்டத்தினின்று நீங்கிய மனத்தோனாகிய கடவுட்டன்மை வாய்ந்த பெரிய முனிவர்
பிரானாகிய குசேலன் ; ஓம்படைப் பெருமான் உள்ளம் உற்றது இவ்வாறே என்று
கூம்பலின் பெயராகையன் ஆய் களி கூர்ந்து இருந்தான் - (நம்) உயிர் காவலாயிருக்கின்ற
எம் பெருமான் திருவுள்ளத்தில் குறித்துள்ளது இத்தன்மையோ வென்று கூப்பதலினின்றும்
நீங்காத கைகளையுடையவனாகிக் களிமிகுந்திருந்தான்.

   (வி - ம்.) பண்ணவன் - தேவன். தேம்பலின் - வாடுதலின். ஓம்படை - காத்தல்.
கூம்பல் - குவிதல். திருமால் இவ்வாறு கூறி மறைந்தவுடன் குசேலன் "எம்பெருமான்
திருவுள்ளம் இதுவோ" என்று கைகுவித்து வணங்கிக் களிப்பு மிகுந்து வாழ்ந்திருந்தான்.
                                                             (741)

நீருறப் பயின்று முள்ளந் நீருறாக் கிடையே போலப்
பாருற வுற்றுஞ் சற்றும் பற்றிலா னாகி யன்பர்க்
கேருற வாய கண்ணன் இணையடிக் குறவு பூண்டு
தாருற வுற்ற தோளாய் சாலநாள் கழிய வாழ்ந்தான்.

   (சொ - ள்.) நீர் உற பயின்றும் உள் அந்நீர் உறா கிடையே போல பார் உறவு
உற்றும் சற்றும் பற்று இலான் ஆகி - நீரில் மிகப்பழகியும் உள்ளே நீர் ஏறப்பெறாத
நெட்டியைப் போல, உலகியற் றொடர்புற்றிருந்தும் சிறிதும் (அவ்வுலகியலில்) அழுந்து
தலிலாதவனாய் ; அன்பர்க்கு ஏர் உறவு ஆய கண்ணன் இடிண அடிக்கு உறவு பூண்டு
தார் உறவு உற்ற தோளாய் சாலநாள் கழிய வாழ்ந்தான் - அடியார்களுக்கு இனிய
உறவினனாகிய கண்ணபிரானது திருவடியிணைக்கு உறவு பூண்டவனாய்ப் பல நாட்கள்
சென்று கழிய வாழ்ந்திருந்தான் ; பூமாலையை மிகுதியாக அணிந்த பரிட்சித்து மன்னனே!

   (வி -ம்.) குசேலன் வாழ்க்கையியல்பு கூறுகின்றது இக் கவி. கிடை - நெட்டி.
தோளாய் என்பது பரிட்சித்து மன்ன