|
கின் யானும் நீங்குவன். இதனை மனத்தில்
அழுந்தப் பதித்துக் கொள்" என்றான்.
(739)
என்றவன் மறாத
வண்ணம்
இனையபல்
வார்த்தை கூறி
ஒன்றரும் பேறு
நல்கி
மறைந்தன
னுவணப் பாகன்
வென்றியங்
கழற்கால் வேந்தே
மேதினி
யிடத்தியார்க் கேனும்
மன்றவுண் டாகுந்
தெய்வ
வலிக்கெதிர்
வலியு முண்டோ.
(சொ - ள்.) என்று அவன் மறாத வண்ணம் இனைய பல் வார்த்தை
கூறி ஒன்ற
அரும்பேறு நல்கி மறைந்தனன் உவணம் பாகன் - என்றிங்ஙனமாக அந்தக் குசேலன்
மறுத்திடாதவாறு இவைபோல்வன பல மொழிகள் கூறி, அடைதற்கரிய பேரின்பப்
பேற்றினையருளிச்செய்து கருடவாகனனாகிய திருமால் மறைந்தனன் ; வென்றி அம்
கழல் கால் வேந்தே மேதினி இடத்து யார்க்கு ஏனும் உண்டாகும் தெய்வம் வலிக்கு
எதிர்வலியும் உண்டோ - அழகிய வெற்றிக் கழலையணிந்த காலினையுடைய பரிட்சித்து
வேந்தனே ! இவ்வுலகத்தில் யாவர்க்காயினும் மிகுதியாக வுண்டாகின்ற தெய்வவலிமைக்
கெதிரான வேறு வலியுமுண்டோ?
(வி - ம்.) மறாதவண்ணம் - மறுத்துரைக்காதவாறு. உவணப்பாகன்
- கருடவாகன
முடையவன் (திருமால்). மன்ற - உறுதியாக. தெய்வவலிக்கு எதிர் வலியுமுண்டோ
என்றது பொதுப் பொருள். குசேலன் செல்வம் வேண்டாம் எனக் கூறியும் நீ நான் தந்த
செல்வத்தை வைத்து வாழ வேண்டும், அதனை இகழ்ந்தால் நானும் உன்னைவிட்டு
நீ்ங்குவேன் எனக் கூறி வற்புறுத்திச் செல்வத்தை ஏற்றுக் கொள்ளச் செய்தான் ; என்ற
சிறப்புச் செயலை முடித்தார். ஆதலால் இது வேற்றுப் பொருள் வைப்பணி. (740)
பாம்பணைப்
பள்ளி மேவும்
பண்ணவன்
மறைத லோடுந்
தேம்பலிற்
றவிர்ந்த சிந்தைத்
தெய்வமா
முனிவர் கோமான்
|