பக்கம் எண் :

குசேலோபாக்கியானம்519


கேற்ற தொழிலைச் செய்யுங் காலங்களிலெல்லாம். மனமாற்றமில்லாராகித் தாங்கள்
தாமரையிலையின் நீரைப்போல் (பற்றின்றியே) நிற்பர் ; போற்றும் நின் தனக்கு இப்
பந்தம் பொருந்தாது பல்நாள் வாழ்வு உற்று ஈற்று நம் உலகம் சார்ந்து இன்பு எய்திட
வரம் தந்தேம் - (நம்மை) வழிபடுகின்ற உனக்கு இந்தச் செல்வப்பற்றுறாது (ஆகையால்)
நெடுநாள் வாழ்ந்து பின்னர் இறுதிக்காலத்து நம் உலகினையடைந்து பேரின்பத்தை
யடையுமாறு வரம் தந்துள்ளோம்.

   (வி - ம்.) உலக வாழ்வுக்குரிய தொழில் இயற்றும் போது தாமரையிலைத்
தண்ணீ்ர்போலப் பற்றின்றிச் செய்வார் மேலோர். நீயும் அவ்வாறே செய்யும்
ஆற்றலுடையாய் ஆதலால் உன்னைப் பந்தம் பற்றாது. நெடுநாள் இச்செல்வ வாழ்வில்
வாழ்ந்து இறுதியில் நம்முலகம் வந்து சேர்வாய் என்று குசேலனுக்கு வரந்தந்தான்
கண்ணன்.                                                 (738)

          திகழ்தர இருத்தி மீட்டுஞ்
               செல்வம்வேண் டுவதின் றென்னிற்
          புகழ்தரு நந்தங் காதற்
               பொன்னைநீ யிகழ்ந்தோ னானாய்
          இகழ்வினுக் கஞ்சி யன்னாள்
               இரிதர இரிவம் யாமும்
          அகழ்வினைத் தவத்தின் மேலோய்
               அழுத்திடிவ் வுரையை யுள்ளம்.

   (சொ - ள்.) திகழ்தர இருத்தி மீட்டும் செல்வம் வேண்டுவது இன்று என்னின்
புகழ்தரு நம்தம் காதல் பொன்னை நீ இகழ்ந்தோன் ஆனாய் - விளங்கும்படி
வாழ்ந்திருப்பாயாக, மறுபடியும் செல்வம் வேண்டுவதில்லை யென்பையாயின், புகழமைந்த
நமது காதற்றிருமகளை இகழ்ந்தவனானாய் ; இகழ்வினுக்கு அஞ்சி அன்னாள் இரிதர
இரிவம் யாமும் அகழ்வினை தவத்தின்மேலோய் இவ் வுரையை உள்ளம் அழுத்திடு -
உனதிகழ்ச்சிக் கஞ்சி அத்திருமகள் நீங்கவே யாமும் (உன்னைவிட்டு) நீங்குவோம்
(ஆதலால்) வினையைக் களைந்த தவத்தையுடைய மேலோனே இம் மொழியை உன்
மனத்திடை யழுந்தக் கொள்வாயாக.

   (வி - ம்.) இருத்தி - இருப்பாய். இரிதர - நீங்க. இரிவம் - நீங்குவம். கண்ணன்
பின்னும் குசேலனை நோக்கி, " நீ செல்வ வாழ்விலே இருப்பாய். வறுமையை வேண்டற்க,
வேண்டின் திருமகளை இகழ்ந்தவனாவாய். இகழ்ச்சியறிந்து திருமகள் நீங்