|
நின்னையச்
செல்வ மென்னோ
செய்யுநே
ரதகத் தோடு
பன்னமந் திரமுள்
ளாரைப்
பாம்பின்வாய்
விடமென் செய்யும்
மன்னுசெங் கதிரோன்
றன்னை
மயங்கிருட்
குழாமென் செய்யும்
உன்னிலை தவறா
தென்றும்
ஒருபடித்
தாய்நிற் பாயால்.
(சொ - ள்.) அச்செல்வம் நி்ன்னை என்னோ செய்யும் நேர் அதகத்தோடு
பன்னும் மந்திரம் உள்ளாரை பாம்பின் வாய்விடம் என் செய்யும் - அந்தச் செல்வந்தான்
உன்னை யாதுசெய்ய வல்லதாம், மருந்துடனே, உருவேறச் செபித்துள்ள மந்திர
முடையாரைப் பாம்பினது வாயினுள்ள நஞ்சம் என்ன செய்யும் ; மன்னு செங்கதிரோன்
தன்னை மயங்கு இருள் குழாம் என் செய்யும் - நிலை பெற்ற செவ்விய
கிரணங்களையுடைய பகலவனை மயங்குதற்குரிய இருட்கூட்ட
மென்செய்யவல்லதாம் ; உன் நிலை தவறாது என்றும் ஒரு படித்தாய் நிற்பாய் - நின்
வழிபாட்டினின்றும் பெயராது எஞ்ஞான்றும் ஒரு பெற்றியே நிற்பாயாக.
(வி - ம்.) அதகம் - மருந்து. விடம் - நஞ்சு, விஷம் என்ற சொல்லின்
திரிபு
விடம் என்பது. மருந்தும் மந்திரமும் உடையோரை நஞ்சு கொல்லாதது போலத் தெய்வ
நினைப்புடையாரைச் செல்வமும் துன்பத்தில் வீழ்த்தாது ஆதலால் என்றும் ஒரு படித்தாய்
நிற்பாய் என்றான் கண்ணன். (737)
சாற்றுமெய்
யறிவி னோர்கள்
தகுதொழி
லியற்றுங் காலை
மாற்றுத லின்றாய்த்
தாந்தா
மரையிலை
நீர்போ னிற்பர்
போற்றுநின்
றனக்கிப் பந்தம்
பொருந்தாது
பன்னாள் வாழ்வுற்
றீற்றுநம் முலகஞ்
சார்ந்தின்
பெய்திட
வரந்தந் தேமால்.
(சொ - ள்.) சாற்றும் மெய் அறிவினோர்கள் தரு தொழில் இயற்றும்காலை
மாற்றுதல் இன்றாய் தாம் தாமரை இலைநீர் போல் நிற்பர் - சொல்லப்பட்ட
மெய்யுணர்வுடையோர் தாம் தமக்
|