|
யானது நன்மை மிகுந்த ஒழுக்கம் என்ற செழித்த
சோலையை எரிக்கும் தீயாம்;
தரித்திரம் கொடிய வெற்றினும் கொடியது (ஆதலால்) அத்தன்மையுள்ள வறுமையை
நீக்குவதே நன்மையாம்.
(வி - ம்.) கடல் நீரை வற்றச் செய்வது வடவைத்தீ என்பது இலக்கிய
மரபு;
ஆதலால் களிப்புக் கடலுக்கு ஓர் வடவை என்பது களிப்பைக் குறைக்கும் என்று
பொருள்பட்டது. வறுமை யுடையார் மனத்திற் பல எண்ணங்கள் தோன்றுவது
இயற்கை ஆதலால் "எண்ணங்கள் வாழ் இடமாகும்" என்றார். பசிப்பிணி பற்றியவர்
பாவம் என்பதை யுணராது பல பழிச்செயல் புரியத் துணிவார் ஆதலால் "ஒழுங்கு
என்னும் தழை வனம் தனக்கு அழல் தழல் ஆம்" என்றார். அழல் - சுடுகின்ற.
அழல் தழல்: வினைத்தொகை. (89)
யாதவர் குலத்தில் தோன்றிய அரசர்
யாவர்க்கும்
அதிபனாம் இணையில்
மாதவ னுடன்நீ பலகலைக் கடலை
வாய்மடுத் தனையென
வகுப்பார்
ஆதலின் அப்பீ தாம்பரன் மருங்கில்
அணைந்தவன்
பாற்பெருஞ் செல்வந்
தீதறக் கொண்டு கொடுத்துநஞ் சிறுவர்
செல்லல்நோய்
தவிர்க்குதல் வேண்டும்
(சொ - ள்.) யாதவர் குலத்தில் தோன்றிய அரசர் யாவர்க்கும்
அரசனாகிய
அணையில் மாதவன் உடன் நீ பல கலைக் கடலை வாய்மடுத்தனை என வகுப்பார்
- யதுகுலத்தில் உதித்த அரசர் யாவர்க்கும் அரகனாகிய உவமையில்லாத
கண்ணபிரானுடன் நீ பல நூல்களாகிய கடலைக் குடித்தனை (கற்றனை) என்று
உலகோர் கூறுவர்; ஆதலின் அதனால்; பீதாம்பரன் மருங்கில் அணைந்து
அவன்பால் பெருஞ் செல்வம் தீது அறக் கொண்டு கொடுத்து நம் சிறுவர் செல்லல்
நோய் தவிர்க்குதல் வேண்டும் - அக்கண்ணபிரான் திருமுன் சென்று, அவனிடத்துப்
பெரிய செல்வத்தைக் குற்றமறப் பெற்றுக் கொண்டு வந்து நம் மக்களின் துன்பமாகிய
பிணியை நீக்க வேண்டும்.
(வி - ம்,) பீதாம்பரன் - பொன்னாடை யுடுத்தவன்; பீதம்+அம்பரன்=பீதாம்பரன்.
பீதம் - பொன். அம்பரம் - ஆடை. அம்பரத்தை யுடையவன் அம்பரன் என்றாயிற்று.
பல கலைக் கடலை வாய்மடுத்தனை என்பது பல நூல்களையும் முற்றக் கற்றனை
என்ற பொருளைத் தந்தது. வாய்மடுத்தல் - குடித்தல். (90)
|