பக்கம் எண் :

குசேலோபாக்கியானம்91


     இளமையில் நின்னோ டிருங்கலை கற்ற
          எழிலிபோல் வண்ணனிற் கண்ட
     அளவையே எல்லாப் பேசரு வளமும்
          அளிக்குவன் ஐயம தின்றால்
     பளகறு நேசன் ஒருவனை படைத்தல்
          பருத்தனப் பொதிபெற்றாற் போன்மென்
     றுளம்மிகத் தெளிந்தோர் புகலும்நன் மாற்றம்
          உண்மையாம் பொய்ம்மையா காதே.

   (சொ - ள்.) இளமையில் நின்னொடு இருங்கலை கற்ற எழிலிபோல் வண்ணன் -
இளமைக் காலத்தில் நும்முடன் உயர்ந்த நூல்களைக் கற்ற மேகம் போன்ற நிறத்தையுடைய
கண்ணன்; நின் கண்ட அளவையே எல்லாப் பேசரும் வளமும் அளிக்குவன் -
உம்மைக்கண்ட அப்பொழுதே சொல்லுதற்கரிய எல்லாச் செல்வங்களையும் தந்தருள்வான்;
ஐயம் அது இன்று - அதிற் சிறிதும் ஐயங்கொள்ளுதல் வேண்டா; பளகறு நேசன்
ஒருவனைப் படைத்தல் பருந்தனப்பொதி பெற்றால் போன்ம் என்று உளம் மிகத்
தெளிந்தோர் புகலும் நல் மாற்றம் உண்மையாம் பொய்மை ஆகாது - குற்றமற்ற
நண்பன் ஒருவனைப் பெற்றிருத்தல் பெரிய செல்வத்திரட்சியைப் பெற்றதனையொக்கும்
என்று மனம் மிகவும் தெளிந்த மேலோர் கூறும் மொழி வாய்மையாம், பொய் யாகாது.

   (வி - ம்.) எழிலி - மேகம். இருமை - பெருமை. இருமை + கலை = இருங்கலை
என்றாயிற்று. பளகு + குற்றம். அறு - அற்ற. போலும் என்பது போன்ம் எனத் திரிந்து
நின்றது.                                                            (91)

     உலகமோர் மூன்றும் வெருவரக் கொடிய
          உஞற்றிய கஞ்சனா தியர்க்கொன்
     றலகில்நன் னெறியோர் இன்புற அளிப்போன்
          ஆதலின் ஆங்கவன் பாற்சென்
     றிலகுறுஞ் செல்வம் வேண்டிடின் நினக்கும்
          ஈகுவன் மற்றவன் மறுக்கின்
     குலவவன் பாதங் காண்டலே அமையுங்
          கோதறு வீடுமெய் தலினே.

   (சொ - ள்.) உலகம் ஓர் மூன்றும் வெருவர கொடுமை உஞற்றிய கஞ்சன்
ஆதியர் கொன்று அலகில் நல் நெறியோர் இன்புற அளிப்போன் ஆதலின் - ஒரு
மூன்றுலகமும் அஞ்சும்படி