|
கொடுஞ்செயல்களைப் புரிந்த கஞ்சன் முதலியவர்களை
அழித்து, அளவற்ற
செந்நெறியாளர் மகிழ்ச்சியை யடையும்படி காப்பவன் ஆதலால்; அங்கு அவன்பால்
சென்று இலகுறும் செல்வம் வேண்டிடின் நினக்கும் ஈகுவன் - அங்கே
அவனிருக்கும் இடத்தில் சென்று விளங்கும் செல்வத்தை வேண்டினால் நுந்தமக்கும்
தந்தருள்வன்; மற்று அவன் மறுக்கின் குலவு அவன் பாதம் காண்டவே அமையும்
கோதறு வீடும் எய்தலின் - அவன் மறுத்தால் அவன் திருவடிகளைக் காண்பதுவே
போதும், அது குற்ற மற்ற வீட்டுலகத்தைத் தரும் ஆதலால்.
(வி - ம்,) உலகம் என்பது இடவாகு பெயர். உலகத்தில் வாழ்வாரை
யுணர்த்தலால், அடியாரைப் புரந்து கொடியாரைத் தொலைக்குங் குணம் வாய்நதவன்
கண்ணனாதலால் அவன் அடிமை யாகிய நமக்கு வேண்டுஞ் செல்வம் அளிப்பான்
என்பது குறிப்பாயிற்று. நீவிர் வைகுந்தவுலகம் வேண்டுவோர் ஆதலால் கண்ணன்
பதத்தைக் கண்டால் வைகுந்தமும் எளிதாய்க் கிட்டும், அது குறித்தாவது
செல்லுங்கள் என்று வழிகாட்டினள் என்பது. (92)
கண்ணனைத் துளப மாலிகை நிறத்திற்
கமலைவாழ் தரவருள்
புரிந்த
மண்ணிய மணியைத் தினந்தினம் போற்றும்
மாசறு தவத்தினர்
உள்ளத்
தெண்ணிய எண்ணி யாங்களிப் பவனை
எய்திநஞ் சிறார்உயச்
செல்வம்
நண்ணிவா என்னா நங்கைசொற் றிடலும்
நற்றவக் குசேலனீ
துரைக்கும்.
(சொ - ள்.) கண்ணனை துளபமாலிகை நிறத்தில் கமலை வாழ்தர அருள்
புரிந்த
மண்ணிய மணியை - கண்ணன் என்னும் பெயரையுடையவனை, துளசி மாலையை
அணிந்துள்ள மார்பில் திருமகள் வாழும்படி அருள் செய்த கழுவப்பட்ட நீலமணி
போன்றவனை; தினம் தினம் போற்றும் மாசு அறு தவத்தினர் உள்ளத்து எண்ணிய
எண்ணியாங்கு அளிப்பவனை - நாள்தோறும் வணங்கும் குற்றமற்ற தவத்தையுடையோர்
தம் மனத்தி்ல் நினைத்தவற்றை நினைத்தவாறே கொடுத்தருள்பவனை; எய்தி நம் சிறார்
உ(ய்)ய செல்வம் நண்ணிவா என்னா நங்கை சொற்றிடலும் நல்தவ குசேலன் ஈமு
உரைக்கும் - சென்று கண்டு நம் மக்கள் பிழைக்கும்படி செல்வத்தைப் பெற்று
வருகவென்று
|