|
(தன்) மனைவி கூறியபோது நல்ல தவத்தையுடைய
குசேலன் இதனைக் கூறுவான்.
(வி - ம்.) நிறத்தில் - மார்பில். மண்ணிய - கழுவப்பட்ட.
உய்ய என்பது உய
எனக் குறைந்து நின்றது: தொகுத்தல் விகாரம். இது என்ற சுட்டு ஈது என நீண்டு
நின்றது செய்யுளாதலால். என்னா - என்று. உரைக்கும் - சொல்வான்: செய்யும் என்னும்
வாய்பாட்டு வினைமுற்று, ஆண்பாலுக்கு வந்தது. (93)
அறுசீரடி
ஆசிரிய விருத்தம்
மக்களுக் கிரங்கி வாடும்
மடத்தகை யணங்கு
கேட்டி
தக்கமுற் பவத்தில் ஆன்ற
தருமம்நன் கியற்றி
னோர்கள்
ஒக்கவிப் பவத்தில் இன்பம்
ஒருங்கனு பவிப்பர்
இன்றேல்
மிக்கவெந் துயரத் தாழ்வர்
இதற்குளம் மெலித
லென்னெ.
(சொ - ள்.) மக்களுக்கு இரங்கி வாடும் மடத்தகை அணங்கு கேட்டி
- மைந்தர்களின்
பொருட்டு இரங்கி வாட்ட முறும் அறியாமைக் குணத்தையுடைய பெண்ணே! கேட்டிடுக;
தத்தம் முன்பவத்தில் ஆன்ற தருமம் நன்கு இயற்றினோர்கள் - தகுதியாகிய முன்னைப்
பிறப்பில் அறத்தினை ஒழுங்காகச் செய்தோர்; ஒக்க இப்பலத்தில் இன்பம் ஒருங்கு
அனுபவிப்பர், இன்றேல் மிக்க வெம் துயரத்து ஆழ்வர் இதற்கு உளம் மெலிதல்
என்னே - அதற்கேற்ப இப்பிறவியில் ஒருசேர இன்பப்பயனை நுகர்வர், இல்லையாயின்
மிகுந்த கொடிய துன்பமாகிய கடலில் அழுந்தி வருந்துவர், இதுபற்றி மனம் இனைந்து
வருந்தக் காரணம் என்ன?
(வி - ம்.) கேள்+த்+இ=கேட்டி=கேட்பாய். மடம்+தகை+மடத்தகை=அறியாமைப்
பண்பு. இன்றேல் என்பது அறம் புரியாது பாவம் செய்திருந்தால் என்ற பொருளை
யுணரத்தியது. ஆழ்வர் என்ற பயனிலைக்குத் தக துன்பக் கடல் என்று பொருள்
கொள்க. (94)
துப்பிதழ் மடந்தை நல்லாய்
தோன்றிய சீவ
ரெல்லாம்
இப்புவி யிடத்துச் சால
எண்ணுவர் எண்ணி
யாங்கே
|