பக்கம் எண் :

94 குசேலோபாக்கியானம்

     எப்படி முற்றும் முற்றா
          தெம்பிரான் ஒருவற் கன்றி
     அப்படி முற்றிற் கீழ்மேல்
          ஆம்பகுப் பிரண்டுண் டாமோ.

   (சொ - ள்.) துப்பு இதழ் மடந்தை நல்லாய் தோன்றிய சீவர் எல்லாம் இப்புவி
இடத்து சால எண்ணுவர் - பவளம் போலும் இதழ்களையுடைய மடந்தையாகிய நல்லாளே!
பிறந்துள்ள உயிர்கள் எல்லாம் இப்பூவுலகில் மிகவும் எண்ணங்கொள்வார்; எண்ணி
ஆங்கு எப்படி முற்றும் முற்றாது எம்பிரான் ஒருவற்கு அன்றி - எம்பெருமான்
ஒருவனுக்கே யல்லாமல் எண்ணிய காரியம் எண்ணியபடியே (நம்போல்வார்க்கு) யாங்ஙனம்
கை கூடும், கூடாதாகும் ; அப்படி முற்றின் கீழ்மேல் ஆம் பகுப்பு இரண்டு உண்டாமோ
- அங்ஙனம் கைகூடுமாயின் கீழோர் மேலோர் ஆகிய வகை நிலைபெறுமோ.

   (வி - ம்) துப்பிதழ் : உவமைத்தொகை. சீவர் - மக்கள். "ஒரு பொழுதும்
வாழ்வதறியார் கருதுப, கோடியுமல்ல பல" என்ற குறட் கருத்து இங்கு ஒப்பு நோக்குக.
"வளம்பட வேண்டாதார் யார் யாருமில்லை அளந்தன போகம்" என்ற நாலடியாரின்
கருத்து "எண்ணி யாங்கு எப்படி முற்றும்" என்ற சொற்றொடரில் அமைந்துள்ளது.
                                                             (95)

     தேற்றமுற் பவத்திற் செய்த
          தீங்குநன் கெனுமி ரண்டும்
     ஆற்றல்சால் கரும மென்பர்
          அக்கரு மத்தை நோக்கிச்
     சாற்றுமிப் பிறப்பில் தக்க
          தரித்திரஞ் செல்வம் நல்கிப்
     போற்றுவன் உயிரை யெல்லாம்
          பொலிசுடர்த் திகிரி வள்ளல்.

   (சொ - ள்.) தேற்ற முன்பவத்தில் செய்த தீங்கு நன்கு எனும் இரண்டும்
ஆற்றல்சால் கருமம் என்பர் - தெளிவாகிய முன்னைப் பிறவியில் இயற்றிய தீமை
நன்மை என்ற இரண்டையும் வலிமிக்க வினைகள் என்று (அறிந்தோர்) கூறுவர் ;
அக்கருமத்தை நோக்கி பொலிசுடர் திகிரிவள்ளல் - அவ்வினைகளின் தன்மையைச்
சீர்தூக்கிப் பார்த்து (அதற்குத்தக) விளங்கும் ஒளியினையுடைய
சக்கரப்படையைத் தாங்கிய நம்பெருமான் ; சாற்றும் இப்பிறப்பில் தக்க தரித்திரம்
செல்வம் நல்கி உயிரை