|
எல்லாம் போற்றுவன் - சொல்லப்படும்
இப்பிறவியில் வறுமையையும் செல்வத்தையும்
அளித்த உயிர்களை எல்லாம் காத்தருள்வான்.
(வி - ம்.) செல்வத்திற்குக் காரணம் முற்பிறப்பிற் செய்த
நல்வினை எனவும்,
வறுமைக்குக் காரணம் தீவினையெனவும், அவ்வினையின் அளவுக்குத் தக்கவாறு செல்வப்
பெருமையும் வறுமைச் சிறுமையும் தருவான் எனவும் கொள்க.
(96)
மைந்தர்கள் தம்மைப் போற்ற வளநிதி வேண்டும்
என்றாய்
நந்திய பறவை கானம் நயந்துறை விலங்கு முன்னா
வந்தபல் லுயிர்க்குச் சேம வைப்புண்டோ வருவா யுண்டோ
எந்திடத் தேனும் போயொன் றிரப்பது தானும் உண்டோ.
(சொ - ள்.) மைந்தர்கள் தம்மைப் போற்ற வளநிதி வேண்டும்
என்றாய் -
புதல்வர்களைக் காத்தற்கு வளமான செல்வம் வேண்டும் என்று கூறினை ; நந்திய
பறவை கானம் நயந்து உறை விலங்கு முன்னா வந்த பல் உயிர்க்கு சேம வைப்பு
உண்டோ வருவாய் உண்டோ எந்த இடத்தேனும் போய் ஒன்று இரப்பது தானும்
உண்டோ - பெருக்கமான பறவைகள் காட்டில் விரும்பி வாழும் விலங்குகள் முதலாகத்
தோன்றியுள்ள பலவகை உயிர்களுக்கு (அவைகள்) சேர்த்துவைத்துள்ள பொருள் உண்டோ
அல்லது ஊதியம் உண்டோ, எவ்விடத்தாயினும் அவை சென்று ஏதேனும் ஒரு பொருளை
இரந்து பெறுதலுமுண்டோ ? (ஒன்றும் இல்லையே எவ்வாறு வாழ்கின்றன ?)
(சொ - ள்.) உண்டோ - இதில் ஓகாரம் எதிர்மறைப் பொருளில்
வந்தது.
இல்லையென்பது பொருள். சேம வைப்பு என்பது மக்கள் தம் உயிர் வாழ்க்கைக்குக்
காவலாக வைத்திருக்கும் பொருள். வருவாய் - அவ்வப்போது வரும் ஊதியம். அடுத்த
கவியுடன் இது தொடரும். (97)
அல்லது நாளைக் கென்செய்
வாமெனுங் கவலை
யுண்டோ
எல்லையி லொன்றி னாலொன்
றிடிப்புண்டு
வாழ்தல் உண்டோ
ஒல்லுமவ் வுயிர்கள் தம்முள்
உணவிலா திறந்த
துண்டோ
சொல்லரி பரந்த உண்கண்
துடியிடைப் பேதை
மாதே.
|