|
(சொ - ள்.) அல்லது
நாளைக்கு என் செய்வாம் எனும் கவலை உண்டோ -
அல்லாமலும் நாளைக்க யாது செய்வோம் என்கிற கவலை தானுமுண்டோ ; எல்லைஇல்
ஒன்றினால் ஒன்று இடிப்புண்டு வாழ்தல் உண்டோ - அளவில்லாத அவற்றுள் ஒன்றினால்
மற்றொன்று வருத்தப்பட்டு வாழ்கின்ற துண்டோ ; ஒல்லும் அ உயிர்கள் தம்முள்
உணவு இலாது இறந்தது உண்டோ - வலிமைகூடிய அந்த உயிர்களுள் உணவு இன்றி
இறந்தவுயிர் ஒன்றுண்டோ ; அரிபரந்த உண்கண் துடிஇடை பேதை மாதே சொல் -
வரிகள் பொருந்திய மையுண்ட கண்களையும் உடுக்கை போன்ற மருங்குலையும் உடைய
அறியாமைமிக்க மாதே ! சொல்லுக.
(வி - ம்.) உண்டு + ஒ = உண்டோ ; ஒ : எதிர்மறைப்பொருள்.
மக்களில்
ஒருவரை யொருவர் வருத்தி அவர்பாலிருக்கும் பொருளைப் பறித்தும் வஞ்சகமாகக்
கவர்ந்தும் வாழ்வது உண்டு ; பறவை விலங்கினங்களில் அச்செயலும் இல்லையென்
றபடி. (98)
கல்லினுள் சிறுதே ரைக்குங்
கருப்பையண்
டத்து யிர்க்கும்
புல்லுண வளித்துக் காக்கும்
புனத்துழாய்க்
கண்ணி யண்ணல்
ஒல்லும்நின் மைந்தர்க் காவா
தொழிவனோ
ஒழியான் உண்மை
மெல்லியல் கொண்ட துன்பம்
விடுவிடு மறந்தும்
எண்ணல்.
(சொ - ள்.) கல்லினுள் சிறுதேரைக்கும் கருப்பை அண்டத்து உயிர்க்கு
புல்லுணவு
அளித்த காக்கும் புனத்துழாய்க் கண்ணி அண்ணல் - கல்லினுள் இருக்கும் சிறிய
தேரைக்கும் கருப்பையினும் முட்டையினும் உள்ள உயிர்கட்கும் நுண்ணிய உணவளித்து
(அவற்றைக்) காக்கும் (உயிர்க்குயிராயுள்ள) கொல்லையில் உண்டாம் துளசிமாலை
தரித்த தலைவனாகிய கண்ணன் ; ஒல்லும் நின் மைந்தர் காவாது ஒழிவனோ
ஒழியான் உண்மை - பொருந்திய உன் புதல்வர் தம்மைக் காத்தல் செய்யாது
விடுவனோ ? விடான் (ஆதலால்) ; மெல்லியல் கொண்ட துன்பம் விடு விடு
மறந்தும் எண்ணல் - மெல்லியல்புடைய பெண்ணே ! நீ கொண்ட துயரத்தை
ஒழியாய் ஒழியாய், மறந்தும் நினையாதே.
(வி - ம்.) கல்லுக்குள் சிறு தேரையிருக்கின்றது. அக் கல்லினை
யுடைத்தபோது வெளிப்படுகின்றது. உடைப்பதற்கு
|