பக்கம் எண் :

குசேலோபாக்கியானம்97


முன் காற்றும் நீரும் உணவும் அதற்கு எவ்வாறு கிடைத்து வாழ்ந்தது ? கருப்பையிலும்
முட்டையிலும் எவ்வாறு உயிர் வளர்கின்றது ? காற்று நீர் உணவு கருப்பைக்குள்
இருக்கும் உயிர்க்கும் முட்டைக்குள் இருக்கும் குஞ்சுக்கும் போய்ச் சேர வழியுண்டோ ?
இவையெல்லாம் இறைவன் அருட்செயல் என்பதை விளக்குகின்றது இது.
                                                                 (99)

     உரைத்தகல் முதலி டப்பல்
          உயிர்க்கெலாம் உணவே யின்று
     வரைத்தஅவ் வுயிரவ் வாறு
          வழங்குதல் இயல்பே யென்னில்
     தரைத்தலை வந்த ஞான்றே
          சலமலம் விடுத்த லுண்டே
     விரைத்தபூங் குழலாய் துய்க்கும்
          உணவின்றி மேவு மேகொல்.

   (சொ - ள்.) உரைத்த கல் முதல் இடப் பல்லுயிர்க்கு எலாம் உணவே இன்று
வரைத்த அவ்வுயிர் அவ்வாறு வழங்குதல் இயல்பே என்னில் - மேற்சொல்லப்பட்ட
கல் முதலிய இடங்களிலுள்ள உயிர்கங்கெல்லாம் உணவெண்பதே யில்லை, வரையறைக்
குட்பட்ட அவ்வுயிர்கள் அவ்வாறு இயங்கல் இயற்கையின் பாற்படும் என்று கூறுதியாயின்
; தரைத்தலை வந்த ஞான்றே சலம்மலம் விடுதல் உண்டே - பூமியிற் றோன்றிய
காலத்திலேயே மூத்திரம் மலங்களைக் கழித்தல் தேற்றமாம் (ஆகையால்) ; விரைத்த
பூங்குழலாய் துய்க்கும் உணவு இன்றி மேவுமே - மணமுள்ள மலர்களணிந்த
கூந்தலையுடையாய்! நுகரும் உணவானன்றி (அங்ஙனம்) பொருந்தலாவதோ ?

   (வி - ம்.) கல், கருப்பை, முட்டை இவற்றுக்குள் இருக்கும் உயிர்கள் உணவு
வேண்டாதவை. அவை இயற்கையுயிர் என்று நாம் கருதினால் அவைகள்
வெளியேறியவுடன் மூத்திரம் மலம் கழிக்கக் காண்கின்றோம். ஆதலால் உணவுண்டிருந்தன
என்பதே தெளிவாகும். உணவின்றி எவ்வாறு உயிர் நிற்கும்? இறைவன் இவற்றிற்கு
எவ்வாயிலாகவோ உணவூட்டுகின்றான் என்று தான் கொள்ளவேண்டும் என்பது கருத்து.
                                                                   (100)

     அலரவன் தீட்டி வைத்த
          ஆயுளின் அளவை காறும்
     விலகிலா வினைக்குத் தக்க
          விருப்புணா வெறுப்பு ணாவும்