|
இலகவுண்
டின்றேல் இன்றாம்
இன்னுயி ருடம்பின்
வாழ்தல்
மலர்தலை யுலகத் தென்று
வகுப்பர்நூல்
உணர்ந்த வல்லோர்.
(சொ - ள்.) நூலுணர்ந்த வல்லோர் - மெய்ந்நூல்களைக் கற்றுத்
தெளிந்து
அறிவாலுயர்ந்த மேலோர் ; மலர்தலை உலகத்து அலரவன் தீட்டிவைத்த ஆயுளின்
அளவை காறும் - பரந்த இடத்தையுடைய உலகத்தில் தாமரை மலரில் உறைகின்ற
நான்முகன் எழுதிவைத்துள்ள வாழ்நாட்களின் எல்லைவரையும் ; விலகிலா வினைக்குத்
தக்க விருப்புணா வெறுப்புணாவும் இலக உண்டு இன்றேல் இன்றாம் இன்னுயிர் உடம்பின்
வாழ்தல் என்று வகுப்பர் - நீங்காத வினைக்க்ீடாக விரும்பும் உணவும் வெறுக்கும்
உணவும் கிடைப்ப அவற்றை உண்டு உயிர்கள் உடம்போடு கூடி வாழும், இல்லையாயின்
(அங்ஙனம் வாழ்தல்) இல்லையாம் என்று வரையறுத்துக் கூறுவர்.
(வி - ம்.) அலர் - மலர். அலரவன் - பிரமன். பூவில் வாழ்பவன்
ஆதலால் அது
பெயராயிற்று. பிரமன் வகுத்த வாழ்நாள் எல்லைவரையும் எவ்வகை யுணவையுண்டாவது
உணவுண்ணாது பசியால் வாடியாவது உயிர் நிற்கும் என்பது கருத்து. வெறுப்புணா -
சுவையற்ற வுணவு. விருப்புணா - அறுசுவையோடு கூடிய உணவு. உணா, உணவு
எனவும் நிற்கும். (101)
ஆதலின் நினது மைந்தர்க்
காயுளுள் ளளவை
காறும்
ஓதிரு வினைக்குத் தக்க
உணவுண்டு புந்தி
மாழ்கேல்
ஏதுவந் தாலும் ஊழால்
எனநினைந் திருத்தல்
வேண்டும்
மாதர்வாள் முத்த மூரல்
மயில்மருள்
நடைப்பூங் கொம்பே !
(சொ - ள்.) ஆதலின் நினது மைந்தர்க்கு ஆயுள் உன் அளவை காறும்
ஓது
இருவினைக்குத் தக்க உணவு உண்டு புந்தி மாழ்கேல் - ஆதலால் நின் புதல்வர்க்கு
வாழ்நாள் உளதாங் காலம் வரையும் சொல்லப்பட்ட இருவினைக்குத் தக்க உணவு
கிடைக்கும், மன மயங்காதே ; ஏது வந்தாலும் ஊழால் என நினைந்து இருத்தல்
வேண்டும் - எது நேர்ந்தாலும் ஊழ்வினையால் நேர்ந்ததென்று கருதியிருக்க
வேண்டும் ; மாதர் வாள் முத்தம் மூரல் மயில்மருள்
|