|
நடை பூங்கொம்பே - அழகிய ஒளியுள்ள முத்துக்களை
யொத்த பற்களையும் மயிலும்
கண்டு மயங்குதற்குரிய நடையினையும் உடைய மலர்க்கொம்பு போன்ற மாதே !
(வி - ம்.) மயில்மருள் நடை என்பதற்கு மயில்போலும் நடை எனவும்
பொருள்
கூறலாம். மருள் : உவமையுருபு. இரு வினைக்குத் தக்க உணவு எனவே நல்வினைக்கு
நல்லுணவும் தீவினைக்குத் தீயுணவுங் கிடைக்கும் என்பதாம். செல்வம், வறுமை, இன்பம்,
துன்பம், சாவு, பிணி இவற்றில் எதுவரினும் ஊழ் என்றிருப்பதே அமைதியாம். அறிஞர்
இவ்வியல்புடையவர் என்று கூறினார்.
(102)
வளநிதி படைத்தோம் என்றும்
வடிவஇல் உடையோம்
என்றும்
அளவில்சே யீன்றோம் என்றும்
அனுபவத் தமைந்தோம்
என்றும்
இளமையிற் சிறந்தோம் என்றும்
எழில்நலம்
உடையோம் என்றும்
உளமகிழ் கூர்வர் சற்றும்
உண்மைநூ லுணர்ச்சி
யில்லார்.
(சொ - ள்.) உண்மை நூல் உணர்ச்சி சற்றும் இல்லார் - மெய்ந்நூற்
பொருளுணர்ச்சி
சிறிதும் இல்லாத மனிதர் ; வளநிதி படைத்தோம் என்றும் - பெருஞ் செல்வத்தை
யீட்டினோம் என்றும் ; வடிவ இல்லுடையோம் என்றும் - அழகிய மனையாளைப்
பெற்றோம் என்றும் ; அளவில் சேய் ஈன்றோம் என்றும் - கணக்கற்ற புதல்வர்களைப்
பெற்றோம் என்றும் ; அனுபவத்து அமைந்தோம் என்றும் - பல போகங்களையும்
நுகர்ந்து வாழ்ந்தோம் என்றும் ; இளமையில் சிறந்தோம் என்றும் - இளமையாகிய
பருவத்தால் சிறப்புற்று வாழ்ந்தோம் என்றும் ; உளம் மகிழ் கூர்வர் - மனத்தில்
(செருக்குற்று) மகிழ்ந்திருப்பர்.
(வி - ம்.) உண்மை நூல் - அறிவு நூல். வளநிதி - பெருஞ் செல்வம்.
வடிவம்
- அழகு. இல் - மனையாள். வடிவில் - அழகுடைய மனையாள். இவ்வாறு மகிழ்ந்திருப்பது
பேதைமை என்பது குறிப்பு. (103)
உயி்ர்க்கொலை புரித லுண்ணும்
உணவுமா றாட்டஞ்
செய்தல்
அயிர்ப்பிலா நண்பர் மாட்டும்
அமைதரக் குய்யஞ்
செய்தல்
|