|
பயிர்ப்புமிக்
குறநல் லோரைப்
பழித்தல்பொய்க்
கரியு ரைத்தல்
செயிர்ப்பிலா லயத்தி டத்துஞ்
சென்றுபட் டிமையி
யற்றல்.
(சொ - ள்.) உயிர்க்கொலை புரிதல் - உயிர்களைக் கொலை செய்தலும்
:
உண்ணும் உணவு மாறாட்டம் செய்தல் - (பிறர்) உண்ணுதற்கமைந்த உணவில் (தகாத)
வேறுபாடு செய்தலும் ; அயிர்ப்பு இலா நண்பர் மாட்டும் அமைதரக் குய்யம் செய்தல்
- (தம்பால்) ஐயுறாத நட்பினர்பாலும் மனமியைந்து வஞ்சனையான செயல்களை (அவர்
அறிந்துகொள்ளாதவாறு) செய்தலும் ; பயிர்ப்பு மிக்குஉற நல்லோரைப் பழித்தல் -
அருவருப்பு மிகவுண்டாம்படி நன்மக்களை இகழ்ந்துரைத்தலும் ; பொய்க்கரி உரைத்தல் -
(இருவர் மாறுகோள் வழக்கிடத்து) பொய்ச்சான்று கூறுதலும் ; செயிர்ப்பு இல்
ஆலயத்திடத்தும் சென்று பட்டிமை இயற்றல் - குற்றமற்ற கோவில்களிலும் சென்று
களவு செய்தலும் ;
(வி - ம்.) இவைகள் தீய தொழில்கள் இவற்றைச் செய்யாது வாழ்வர்
நல்லோர்.
(104)
இவைமுதற் பலவும் மாந்தர்
இயற்றிநாள்
கழியா நிற்பர்
அவையெலாம் பொருள்நி மி்த்தம்
ஆகுமப் பொருளைப்
பெற்றாற்
குவையுறப் புதைத்து வைத்துக்
குதுகுதுப் படைந்து
காத்து
நவையுறு பணப்பே யென்னும்
நாமமும் பெறுவர்
மாதோ.
(சொ - ள்.) இவைமுதல் பலவும் மாந்தர் இயற்றி நாள் கழியா
நிற்பர் - இவை
முதலாகிய பல தீச்செயல்களையும் மக்களிற் பலர் புரிந்து வாழ்நாள் கழிப்பர் ; அவை
எலாம் பொருள் நிமித்தம் ஆகும் - அத்தீய செயல்களெல்லாம் பொருளின்
காரணமாகவேயாகும் ; அப்பொருளைப் பெற்றால் குவை உறப் புதைத்து வைத்து
குதுகுதுப்பு அடைந்து காத்து நவை உறு பணப்பேய் என்னும் நாமமும் பெறுவர் -
அப் பொருளினை அடையப் பெறுவரெனில் குவியலாகப் (நிலத்தில்) புதைத்து
மிகுமகிழ்ச்சியடைந்து காவல் செய்து பணப்பேய் என்று (பிறரால்) இழிவுபடக் கூறும்
பெயரையும் உடையோராவர்.
|