பக்கம் எண் :

12அழகர் கிள்ளைவிடு தூது


அக்கினிவாவி, அனுமதீர்த்தம், இட்ட சித்தி, உத்தமநாராயணவாவி, கதலிவாவி, கருட
தீர்த்தம், பண்டாரிவாவி, பவகாரணி, பாண்டவ தீர்த்தம், புண்ணியசரவணம், பெரிய
அருவி, வேணு தீர்த்தம் முதலிய பல தீர்த்தங்களும் உள்ளன.

கோயின் மரம்

  கோயின் மரம், முதல் யுகத்தில் ஆலமரமாகியும், இரண்டாவது யுகத்தில்
அரசமரமாகியும், மூன்றாவது யுகத்தில் வில்வமரமாகியும், நான்காம் யுகமாகிய
இக்கலியுகத்தில் புத்திர தீபம் என்ற பெயருடையதாகியும் நிற்கும் ஒரு மரம் உண்டு
என்று இந்நூல் கூறுகின்றது. சிலம்பாற்றுத் தொடக்கத்தில் ஆலமரம் இருந்தது என்றும்,
சந்தனமரம் தான் கோயின் மரமாக முன் இருந்தது என்றும், சிலப்பதிகாரத்திற்கூறிய
கோங்க மரமேயிருந்தது என்றும், உறங்காப் புளியே இருந்தது என்றும், சோதிமரம்
என்று ஒன்று இருந்தது என்றுங் கூறுவர். உண்மையாய்ந்தறிக.

மண்டபம்

   இக்கோயிலுக்குரிய மண்டபங்கள் பலவுள்ளன : சிலம் பாற்றங்கரையில்
அமைந்துள்ள மாதவி மண்டபம், சாம்பல் போடும் மண்டபம் என்று பெயர் வழங்கும்
பதினாறு கால்களையுடைய சோலைமலை மண்டபம், கல்யாணசுந்தரவல்லி
நாச்சியாருக்குக் கனுத் திருவிழா நடைபெறும் கனு மண்டபம், அழகர் எழுந்தருளி
வந்தமரும் வண்டியூர் மண்டபம், தேனூர் வாழ்வோர்களாற் கட்டப்பட்டு அழகர்
எழுந்தருளி வந்தமரும் இடமாகிய தேனூர் மண்டபம் ஆகியவை சிறந்தன.

அழகரை வணங்கிப் பேறு பெற்றோர

   அம்பரீடன், அருச்சுனன், அனுமன், இந்திரன*ருடன், கந்தருவன் ஒருவன்,
சந்திரகேது, தருமதேவர்