தாலப்பியர், பச்சைவாரணதாசர், பராசரர், பாண்டவர், பிரகலாதன், பிரமன், புரூரவசு, மலையத்துவசன், மார்க்கண்டன், மாவலி, கௌதமன், சௌனகன், மரீசி, மைத்திரேயர், சதிரிளமடவார் முதலிய பல மன்னரும் முனிவரும் வந்து வணங்கிப் பேறுபெற்றன ரெனத் தலபுராணங் கூறுகின்றது. புண்ணியமும் யானையும் போற்றிப் பேறு பெற்றன என்றும் புகல்கின்றது அது. | | வேறு கோயில்கள் | அழகர் கோயிலை யடுத்துப் பல பெயர்களுடன் வேறு கோயில்களும் இருக்கின்றன. நாகநாதர் கோயில், இராக்காயி அம்மன் கோயில், அனுமன் கோயில், கருடன் கோயில், பாண்டவர் கோயில், சதிரிளமடவார் கோயில், சக்கரத்தாழ்வார் கோயில், தண்டலைக் கோயில், வெள்ளி மலைக் கோயில் என்பன அவை. | | விழா | இந்நூலிற் சிறப்பித்துக் கூறப்படும் கோடை விழாவே தலைமையான விழாவாம் இது சித்திரைத் திங்கள் நிறைநிலா நாளில் நிகழ்வது. இவ்விழாவில் அழகர் கோயிலை விட்டு எழுந்தருளும்போது ஆண்டாள் சூடிக்கொடுத்து விடுத்த பூங்கோதையைப் புனைந்து செல்வது வழக்கம். வைகாசித் திங்களில் வசந்த விழா நடைபெறும். பத்துநாள் வரை நிகழ்ந்து பின் முடிவுறும் அவ்விழா. ஆனித் திங்களில் நிகழும் விழாவிற்கு முப்பழ விழா என்று பெயர். முக்கனிகளும் அழகருக்குப் படைத்து வழிபடுவர். நிறைநிலா நாளில்தான் இதுவும் நடைபெறும். ஆடித் திங்கள் மறைநிலா நாளிற் கருடசேவை என்ற விழா நிகழும். ஆவணியில் திருப்பவுத்திர விழா ஐந்து நாள் நிகழும். புரட்டாசியில் ஒன்பதிரவு (நவராத்திரி) விழாவுண்டு. எண்ணெய்க் காப்பு விழா, ஐப்பசி வளர்பிறை பன்னிரண்டில் தொடங்கி நிகழும். திருக்கார்த்திகை விழா, அத்தியயன விழா, சட்டத் தேர் விழா, திருக்கல்யாண விழா இவை முறையே கார்த்திகை | | |
|
|