களும், சடகோப நம்பி என்பவரும், திருமாலிருஞ் சோலைப் பிரியர் என்பவரும், அம்மலையிலிருந்து ஆளுந் திருமாலாகிய அத்தெய்வத்தினருளையே துணையாகக் கொண்டு எந்நாளும் வாழும் கோயிற் பணியாளர் பலரும் கூடிப் பாதத்தை வணங்கும்படி திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பர் அழகர். அப்போது நீ சென்று என் காதலைக் கூறுவையாயின் அம்மொழி செவியிலேறாது. பள்ளியறைக்கு எழுந்தருளும் அமையம் பார்த்து எழுந்து ஒருவரும் ஒன்றுஞ் சொல்லாத அமையமும் பார்த்து நீ சொல்லுக. மன்மதன் மலரம்பு தூற்ற வருவதற்கு முன்னும் அயலார் என்னை யலர்கூறி்த் தூற்றுவதற்கு முன்னும் குடமுனிவாயினடங்கி வெளிவந்த கடலின் ஒலியடங்கவும், தாய்மார் வாயின் அதட்டுஞ்சொற்கள் அடங்கவும் நீ தூது கூறுவாய். சுவாகதம் என்பது உன் பெயர். அதன் பொருள் நல்வரவு என்பது. ஆதலால் உன்வரவை நல்வரவாகக் கொள்வார் எல்லாரும், இராமனே உன்னைப் புகழ்ந்தான் என்றால் யார்தாம் உன்னைப் புகழாதிருப்பவர்? எல்லாரும் புகழ்ந்து பேசுவர். நீ முதலில் திருமாலை நோக்கி, 'உம்முடைய இருபுயத்து மாலையை யுதவும்' எனக் கேள். அதனை உதவாது மறுத்தனரெனில், நாச்சியார் சூடிக்கொடுத்த மாலையையாவது கேள்; அழகர் கருணையுடையவர்; ஆடித்தியாகம் அளிப்பவர் ; எவர்க்கும் இல்லை என்று சொல்லார். அதனால் அவர் புயத்து மணமாலையை வாங்கி வருவாயாக" என்று கூறிமுடிக்கின்றாள் ; தலைவி, இந்நூற் செய்யுணடை, எதுகை மோனை யமைந்து இனிமையும் எளிமையும் வாய்ந்து, ஒழுகிய ஓசையும் விழுமிய பொருளும் கெழுமியதாய்ப் படிக்கப்படிக்க இன்பந் தரும் பான்மையினமைந்து செல்கின்றது. தன்மை முதலிய பொருளணிகளும், மடக்கு முதலிய சொல்லணிகளும் பல விடங்களில் வந்துள்ளன. இராமாயணம், பாகவதம், கந்தபுராணம், திருவிளையாடற் புராணம் ஆகிய புராணங்களிற் கூறப்படுங் கதைகள் பல வரக் காண்கின்றோம். பழமொழி நாட்டுவழக்கம், மரபு, உலகியல்பு, இடையிடையே வருகின்றன. எனவே இந்நூலாசிரியர், இலக்கணம் இலக்கிய | | |
|
|