பக்கம் எண் :

ஆராய்ச்சி உரை23


அழகர் பல அடியார்களுடன் இருந்தால் அவ்வடியார்கள் பாடுவதுபோல
நீயுங் கீர்த்தனம் பாடுவாய். நாச்சியார் பக்கத்திருந்தால் அவர் கையிற்பறந்து சென்று
தங்குவாய். 'எங்கிருந்து வந்தா' யென்று வினவினால் 'எந்தாய்!
திருமாலிருஞ்சோலையிலிருந்து உனைத் தேடித் தொழுவதற்கு வந்தேன்'
என்றுரைப்பாய். சவுந்தரவல்லிக்கும் சூடிக் கொடுத்தாளுக்கும் தோன்றாதபடியும்
கடுகளவு சினமும் தோன்றாதபடியும் என் காதலை வடுகிலே (தெலுங்கிலே) சொல்வாய்.
என் கவலையையும் நீக்குவாய். அழகர் புனைந்திருக்கும் மண மாலையை
வாங்கிக்கொண்டு வருவாய் ; இத்துணைத் தகுதியுடைய பறவை ஒன்று எங்கேனும்
உளதோ? இல்லை. நீயே செல்" என்று கூறிப் பின் இடம் அமையம்
எடுத்துரைக்கின்றாள்.

இடம் அமையம் எடுத்துரைத்தல்

  அழகர் இருக்கும் இடம் சோலைமலை. அத்தலத்தில், முதல் யுகத்தில் ஆலாகி,
இரண்டில் அரசாகி, மூன்றிலே வில்வமாகி, நான்காகிய இக்கலியுகத்திற் புத்திரதீப
மென்ற பெயர்பெற்ற மரமாகித் தேவர்கட்கு ஆறாவது தருவாகி நிற்கும் ஒரு மரமுண்டு.
அன்றியும், நெருங்கிய கோடிக் கணக்கான பூஞ்சோலைகளும் யாறுகளும்
பூஞ்சுனைகளும் உள்ளன. யோகிகளைப்போல இரவும் பகலும் உறங்காப் புளியமரமும்
ஒன்றுண்டு. மகன் தன் தந்தையுடன் பேச வருவதுபோலப் பிரமன் வருவான். வந்து
தந்தையாகிய அழகரைக் கண்டு பேசித் தங்கியிருப்பன். இந்திரன் தன் துணைவனாகிய
உபேந்திரனி்ல்லையே என்று கருதி வந்து வணங்கியிருப்பன். பரதன், சுக்கிரீவன்,
விபீடணன் என்ற தம்பியர்க்கு அரசு கொடுத்த இராமன் ஆகிய அழகர் அவர்களுடன்
அங்கிருப்பர். சீரங்கராசபட்டர் என்ற அர்ச்சகரும், திருமாலிருஞ்சோலைச் சீயரும்,
திருமாலையாண்டானும், தோழப்பையங்கார் என்னும் ஆச்சாரியரும், ஒவ்வொரு நாளும்
பணியும் பட்டராகிய வேதபாரகரும், அமுதார் என்பவரும், திருமலை நம்பிகளும்,
சோலைமலை நம்பி