| அளந்த திருத்தாளான் அன்றேற்ற கையான் விளைந்த பொருள்காட்டும் மெய்யான்-உளங்கொண் டிடந்த மருப்பினா னேந்து முதுகான் படந்தனில் வைத்தமணிப் பாயான்-தொடர்ந்தவினை முட்டறுக்குந் தன்னாம முன்னித் திருநாமம் இட்டவருக் கீவோன் இகபரங்கள்-எட்டெழுத்தாற் |
130 | பிஞ்செழுத்தாய் நையும் பிரம லிபியெனும்பேர் அஞ்செழுத்தை மூன்றெழுத் தாக்குவோன்-வஞ்சமறத் தங்கள்குன் றெங்கிருந்துஞ் சங்கரன் ஆதியோர் நங்கள்குன்றீ தென்னவரு நண்புடையோன்-அங்கோர் வயமுனிக்குக் கண்ணிரண்டு மாற்றினோன் போற்றும் கயமுனிக்குக் கண்கொடுத்த கண்ணன்-நயமுரைக்கின் அஞ்சுபடை யோனெனினும் அஞ்சாமல் அங்கையில்வா சஞ்செய்யு முத்யோகச் சக்கரத்தான்-எஞ்சாது விண்ணிலங்கொள் பொன்னிலங்கை வெற்றியாய்க் கொண்டாலும் மண்ணிலங்கைத் தானமாய் வாங்குவோன்-பண்ணிலங்கும் |
135 | ஏரணி பொன்னரங்கத் தெம்பிரான் போல்எவர்க்கும் தாரணி நல்காத தம்பிரான்-காரணியும் செங்கைத் தலத்திடத்துந் தென்மதுரை யூரிடத்தும் சங்கத் தழகனெனுந் தம்பிரான்-எங்கும் திருப்பாது கைக்குஞ் செழுங்கருட னுக்கும் திருப்பாது கைக்கும்அர சீந்தோன்-விருப்பமுகம் சந்திரன் ஆன சவுந்தர வல்லியுடன் சுந்தர ராசன்எனத் தோன்றினோன்-அந்தம் சொலநலங்கொ டோள்அழகார் சுந்தரத் தோளன் மலையலங் காரனென வந்தோன்-பலவிதமாய் |
140 | நண்ணியதெய் வத்தை நரரெல்லாம் பூசித்த புண்ணியமே தன்னைவந்து பூசித்தோன்-கண்அனைய பாதகமலம் பரவுமல யத்துவசன் பாத கமலம் பறித்திடுவோன்-கோதில் |