| அரணாம் புயங்களுறும் அம்பரீ டற்குச் சரணாம் புயங்கள் தருவோன்-திருநாளில் |
| கோடைத் திருவிழா |
| சந்தக்கா வூடு தவழ்ந்துவருந் தென்றற்கால் மந்தக்கா லாக மருவுங்காற்-சிந்திக்கும் வாடைத் துளிபோன் மலர்த்தேன் றுளிதுளிக்கும் கோடைத் திருவிழாக் கொண்டருளி-நீடுவிடைக் |
| தல்லாகுளம் வருதல் |
145 | குன்றிலுற்ற வெள்ளங் கொழுந்தோடி வையைதனிற் சென்றெதிர்த்து நிற்பதெனச் சீபதியோர்-அன்றெதிர்த்துக் கூடலிற் கூடலெனுங் கூடற் றிருநகரில் ஏடலர் தாரான் எழுந்தருளி-ஆடலுடன் கல்லா குளங்கள் கரையப் பணிவார்முன் தல்லா குளம்வந்து சார்ந்தருளி-மெல்ல |
| வையைக்கரைத் திருக்கண்களில் வைகுதல் |
150 | நரலோக மீது நடந்துவரு கின்ற பரலோக மென்று சிலர் பார்க்கச்-சுரலோகத் திந்திரவி மானமிது என்றும் இதுசோமச் சந்திரவி மானமே தானென்றும்-முந்தியவட் டாங்க விமானம் அவையிரண்டும் என்னவே தாங்கு விமானந் தனிற்புகுமுன்-தீங்கிலார் உன்னி விமானம் உரத்தெடுக்கும் போதனந்தன் சென்னிமணி யொன்று தெறித்தெழுந்த - தென்னவே உம்பரில் வெய்யோ னுதயஞ் செயக்குதிரை நம்பிரா னேறி நடந்தருளி-அம்பரத்திற் கோடி கதிரோனும் கோடி பனிமதியும் ஓடி நிரையா உதித்தவென-நீடிய |