பக்கம் எண் :

அழகர் கிள்ளைவிடு தூது49


155
 

 

 

 

 


160

 

பொற்கொடியும் வெள்ளிக் குடையும் பொலிந்திலங்க
விற்கொடிகள் விண்ணோர் வெயர் துடைப்பச்-சொற்கத்
தியலுங் கரியுமதி லெற்று முரசும்
புயலும் உருமேறும் போலக் கயலினத்தை
அள்ளுந் திரைவையை யாறுட் பரந்துநர
வெள்ளங் கரைகடந்து மீதூர-வள்ளல்
திருத்தகு மேகம்போற் செல்லுதலால் நீர்தூம்
துருத்தி மழைபோற் சொரியக்-கருத்துடனே
வாட்டமற வந்து வரங்கேட்கும் அன்பருக்குக்
கேட்டவரம் ஊறுங் கிணறுபோல்-நாட்டமுடன்
காணிக்கை வாங்க அன்பர் கைகோடி யள்ளியிடும்
ஆணிப்பொற் கொப்பரைமுன் னாகவரக்-காணிற்
புரந்தரற்கு நேரிதென்று போற்றிசைப்ப வோரா
யிரந்திருக்கண் வையைநதி யெய்தி-உரந்தரித்த
 

வண்டியூர் மண்டபம் வந்து தங்குதல்

  வார்மண்டு கொங்கை மனம்போல் விலங்குவண்டி
யூர்மண்ட பத்தி னுவந்திருந்து-சீர்மண்டு
 

ஆதிசேட வாகனத்திற் பவனி வருதல்

 

 

165

மாயனுக்கு வாகனமாய் வாவென்று சேடனைத்தான்
போயழைக்க வெய்யோன் புகுந்திடலும்-தூயோன்
மருளப் பகலை மறைத்தவன் இப்போ
திருளைப் பகல்செய்தா னென்னத்-தெருளவே
அங்கிக் கடவுளும்வந் தன்பருட னாடுதல்போற்
றிங்கட் கடவுள்சே விப்பதுபோற்-கங்குற்
கரதீப மும்வாணக் காட்சியுங் காண
வரதீப ரூபமாய் வந்த-திருமால்
அவனி பரிக்கும் அனந்தாழ்வான் மீது
பவனிவரக் கண்டு பணிந்தேன் - அவனழகிற்